Pages

Tuesday, May 11, 2010

லினக்ஸ் இல் உள்புகுதலும்/வெளியேறுதலும்

உள்புகும் செயல்முறை(login)
லினக்ஸ் முறைமை பல பயனர்கள் ஒரே நேரத்தில் பணியாற்ற அனுமதிக்கிறது. பயனர் பெரும்பாலும் முணையத்தில் பணியாற்றுவர்.முதலில் நீங்கள் லினக்ஸ் முறைமையோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.லினக்ஸ் முறைமை சில தகவல்களைக் காட்டி முடிந்தபின் உள்புகு துண்டியைக் காட்டும்(prompt). அங்கே உங்கள் உள்புகு பெயரை(லாகின் name) உள்ளிட வேண்டும்.உள்புகு பெயர் என்பது உங்களுக்குரிய பயனர் பெயர் ஆகும்.லாகின் என்ற சொல்லைக் கண்டு அஞ்சத் தேவையில்லை இங்கே பயனர் என்ற பொருளைத் தருகின்றது.
வெளியேறும் செயல்முறை(logout)
உங்கள் இல்லக் கோப்பகத்தை மூடாமல் முறைமையை விட்டு வெளியே வந்தால் ,மற்றவர்கள் உங்கள் தகவல்களுக்குக் தீங்கு விளைவிக்ககூடும். எனவே லினக்ஸ் முறைமையைவிட்டு முறைப்படி வெளியேறுவது கட்டாயமாகும்.கட்டளைத் துண்டுகுறியில்(commandprompt) எசிட் அல்லது லோகௌட் என உள்ளிட்டால் உங்கள் நடப்பு லினக்ஸ் அமர்வு முடிவுக்கு வரும். அடுத்து முறைமை பிற பயனர்களுக்காக உள்புகு துண்டுகுறியை திரையில் காட்டும்.

3 comments: