லினஸ் டோர்வால்ட்ஸ் பின்லாந்தில் உள்ள ஹெல் சின்க்கி பல்கலைக்கழகத்தில்
படித்துக்கொண்டிருந்த போது,விதிமுறைகளின்படி அவர் திட்டப்பணியை(project) உருவாக்க வேண்டி இருந்தது .அக்காலகட்டத்தில் பேராசிரியர் ஆண்ட்ரு எஸ்.டேனன்பம் அவர்கள் உருவாக்கிய யூனிக்சின் ஒரு வடிவமான மினிக்ஸ் இயக்க முறைமையை மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.மினிக்ஸ் ஐ படித்தபின் ,அதன் தாயான யூனிக்சின் நேர்த்தியும், செயல்திறனும் லினசை வெகுவாகக்கர்வர்ந்தது .
யூனிக்ஸ் இயக்க முறைமை கென் தாம்சன் அவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டது. மினிக்ஸ் பயனலர்களுக்காக பீசியில் செயல்படக் கூடிய செயல்திறன் மிக்க யூனிக்ஸ் பதிப்பை உருவாக்க லினஸ் டோர்வால்ட்ஸ் தீர்மானித்தார்.அந்த இயக்க முறைமைக்குத் தன்னுடைய முதல் பெயரோடு யூனிக்ஸ் இன் கடைசி எழுதைஸ் சேர்த்து 'லினக்ஸ்' என பெயரிட்டார். ௧௯௯௧(1991) ஆம் ஆண்டு அதன் முதல் பதிப்பு 0.11-ஐ வெளியிட்டார்.
லினக்ஸ் இயங்குவதற்கு வெறும் ௪(4)எம்பி நினைவகம் மட்டுமே இருந்தல் போதும். இந்த இயக்க முறைமை அதன் அனைத்து வசதிகளோடும் இந்த அளவுக்குக் குறைந்த நினைவகத்தையே எடுத்துக்கொள்கிறது என்பது வியத்தகு செய்தியாகும். இதன் காரணமாக லினக்ஸ் இன் நிலைபுருதியோ(stability) வேகமாக பாதிக்கப்படவில்லை
வேட்டையை தொடருங்கள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை
ReplyDeleteஇன்னும் வேட்டையை ஆரம்பிக்கவில்லையா?உங்களை நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
ReplyDelete