Pages

Sunday, May 23, 2010

லினக்ஸ் Administrator தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய 20 commands ...

லினக்ஸ் Administrator தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய கட்டளைகளை இந்த பதிப்பில் பார்ப்போம்,லினக்ஸ் சம்மந்தமாக படிக்க நினைக்கும் பயனாளர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் இந்த தொடர் மிகவும் பயன்படும் என நினைகின்றேன். லினக்ஸ் administrator இன் வேலைகள் என்வென்றால் Memory , Network , user ,Cpu
போன்றவைகளை நிர்வாகிப்பது தான். தற்பொழுது நிலவும் சுழலில் லினக்ஸ் வேலைவாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது மேலும் மாணவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால் லினக்சை பற்றிப் படிக்கும் போதே அதனை தெளிவாக படிக்கவும் மற்றும் command னை அடிக்கடி பயன்படுத்தி பார்க்கவேண்டும்.சரி நாம் நமது தொடருக்கு செல்வோம் முதல் இருபது கட்டளைகள் வருமாறு.
  • top
  • vmstat
  • w
  • uptime
  • ps
  • free
  • iostat
  • sar
  • mpstat
  • pmap
  • netstat
  • iptraf
  • tcpdump
  • strace
  • htop
  • Nagios
  • Cacti
  • nmap
  • vnstat
  • lsof
இந்த அனைத்து tool களும் மிகவும் அதிகமா பயன்படுதப்படுகின்ற tool ஆகும்.முதலில் toptool இன் பயன்பாட்டை பார்போம் ,இந்த tool கணினியில் நடைபெறும் அனைத்து வேலைகளின் pid னை திரையில் தோன்ற செய்யும்.terminal இல் top என type செய்தால் போதும் பின்வருமாறு தோன்றும்.vmstat இந்த command கணினியில் உள்ள அனைத்து memory , cpu ,porcess id ,போன்றவைகளை திரையில் காட்டும்,அதற்கு டெர்மினல் இல் vmstat என type செய்யவேண்டும்.uptime இந்த command system எப்பொழுது on செய்தோம் என்ற தகவலை திரையில் தோற்றிவிக்கும்.
free இந்த கட்டளை கணினியில் எவ்வளவு free memory area உள்ளது என தெரிவிக்கும்.ps process id யையும் w யார் login செய்துள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கும்.
இந்த
htop,Nagios,Cacti,nmap,vnstat,lsof கட்டளைகள் network connection நிலையை தெரிவிக்கும்.
குறிப்பு:

உபுண்டு இலவச லினக்சில் மேலே தந்துள்ள command சிலது மட்டுமே செயல்படும் ,ஏன் என்றால் இந்த command அனைத்துமே தனி தனி package இல் இருக்கும் எனவே உபுண்டு லினக்சினை மேன்படுதினால் மட்டுமே பயன்ப்படுத்த முடியும்.மேலும் இந்த கட்டளைகளை பற்றி தெரிந்துகொள்ள வலைப்பூவை இன் இடது ஓரத்தில் உள்ள கட்டளைகள் கற்க உதவும் தளம் 1 , 2 இல் சென்று படிக்கவும் நன்றி!

4 comments:

  1. ஆனா இந்த‌ Vmstat- ppp0 connectionக‌ளை பார்க்க‌மாட்டேன் என்கிற‌து அத‌ற்கான‌ குறுக்கு வ‌ழி ...நானே க‌ண்டுபிடித்த‌து என்ன‌வென்றால் க‌ணினியை மூடும் முன் ifconfig போட்டால் போதும் அதில் உங்க‌ளுடைய‌ ப‌ய‌ன்பாடுக‌ள் தெரிந்துவிடும்.
    ஒரு முக்கிய‌ குறிப்பு : நான் லின‌க்ஸ் அட்மினிஸ்டிரேட்ட‌ர் இல்லை. :-))

    ReplyDelete
  2. நான் விண்டோஸ் 7 ஐப் பயன்படுத்தி நொந்த நிலையில் இருக்கிறேன்..
    பல எக்ஸ் பி மென்பொருள்கள் 7 ல் வேலை செய்யவில்லை.7 ஹோம் வெர்ஷனை எக்ஸ் பிக்கு கொண்டு வரவும் முடியவில்லை.அதற்கும் அநியாயக் காசு கேட்கிறார்கள் மைக்ரோஸாப்ஃட் பக்கத்தில்..
    எனது பயன்பாடு தனிப்பட்ட மற்றும் எஸ் க்யு எட் செர்வர் சார்ந்த மென்பொருள்களுடனுமானது..நான் லினக்ஸ்க்கு மாறுதல் நல்லதா?

    விளக்கமான மின்மடல் அல்லது இணையப்பக்கச் சுட்டி அளித்தால் மகிழ்வேன்..
    நன்றி..
    மின்மடல்: enmadal@yahoo.com

    ReplyDelete
  3. வடுவூர் குமார் said...
    //ஆனா இந்த‌ Vmstat- ppp0 connectionக‌ளை பார்க்க‌மாட்டேன் என்கிற‌து அத‌ற்கான‌ குறுக்கு வ‌ழி ...நானே க‌ண்டுபிடித்த‌து என்ன‌வென்றால் க‌ணினியை மூடும் முன் ifconfig போட்டால் போதும் அதில் உங்க‌ளுடைய‌ ப‌ய‌ன்பாடுக‌ள் தெரிந்துவிடும்.//
    நண்பரே vmstat என்பது virutal memory status இன் சுருக்கம் ஆகும் இதன் payanpaatu என்னவென்றால் லினக்சில் உள்ள Swap area வின் free space னை பார்க்க உதவும் ஒரு வகையான tools களில் ஒன்று vmstat கும் ifconfig கும் எந்தவித தொடர்பும் இல்லை ifconfig என்ற tool ip address னை லினக்சில் configure செய்ய உதவுகிறது..நன்றி

    ReplyDelete