எனது நண்பன் லியோ எப்படி லினக்சில் CD/DVD னை write செய்வது மேலும்windows இல் CD/DVD யை write செய்ய பலவகையான மென்பொருள்கள் உள்ளது லினக்சில் உள்ள CD/DVD write செய்யும் மென்பொருளை கூறு?
என என்னிடம் கேட்டுள்ளார்.
எனது நண்பனுக்கும் வலைப்பூவை வாசகர்களுக்கும் இந்த பதிவு பயன்னுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன் லினக்சில் CD/DVD னை write செய்ய பலவகை மென்பொருள் இருந்தும் அதன் பெயர் நம்மில் பலருக்கு தெரிவதில்லை,
ஒவ்வொரு லினக்ஸ் பதிப்பும் தங்கள் பதிப்பில் default
ஆக CD/DVD னை write
செய்யும் மென்பொருள் அல்லது tool னை தந்துள்ளனர்எடுத்துக்காட்டுக்கு உபுண்டு லினக்சில் default ஆக Nautilus 2.26.2 CD/DVD creater ராய் தந்துள்ளனர்,
CD/DVD writer களின் பெயர்களை கிழே தந்துள்ளேன். - GNOME Nautilus:
- gCombust
- GNOME Toaster
- Disc-O-Matic
- CDrecorder
- ECLipt
- KisoCD
- SSCDRFE
- TkBurn
- BurnIT
- FireBurner
- Mp3Cd
- X-CD-Roast
- K3B
- மேலே சொன்ன அனைத்து மென்பொருளும் மிக அற்புதமாக தனக்குரிய வேலையை மிகதெளிவாக விரைவில் செய்கின்றது,இதில் K3B CD/DVD creater இன் செயல்பாடோ Neroவை மிஞ்சும் அளவுக்கு இருகின்றது. லினக்ஸ் இல் இரண்டு வழிகளைபயன்ப்படுத்திCD/DVD யை write செய்யலாம் Command Line மூலமாக மற்றும் GUI Interface .
- பின்வரும் எடுத்துகாட்டு கட்டளை மூலமாக எவ்வாறு cd burn செய்வது என்பதைகுறிகின்றது.
cat /dev/scd0 > RedHat-7.0-i386-powertools.iso or
mount -t iso9660 -o ro /dev/cdrom /mnt/cdrom
- மேலே உள்ள command write செய்ய வேண்டிய ISO file லை cd rom இல் copy செய்கின்றது.
cdrecord -v -eject speed=16 dev=ATA:1,0,0 RedHat-7.0-i386-powertools.iso
- மேலே உள்ள கட்டளை ISO file லை cd இல் burn செய்கின்றது.
GUI Interface னை பயன்படுத்தி எவ்வாறு write செய்வது என்பதை பார்ப்போம்.
நான் Nautilus னை பயன்படுத்தி CD யை write செய்துள்ளேன்.
- முதலில் cd யை cd drive இல் உல் நுழைக்க வேண்டும்.
- Nautilus னை ஓபன் செய்து எந்த file லை write செய்ய வேண்டுமோ அதனை file menuவில் சென்று தெரிவு செய்யவேண்டும் அல்லது தங்கள் கணினியில் உள்ள அனைத்து file களையும் Nautilus இன் வலது ஓரத்தில் காண்பிக்கும் அதில் தங்களுடைய file லை தெரிவுசெய்க. file menu வில் சென்று writeTodisc னை தெரிவு செய்க பின்னர் ஒரு திரை தோன்றும்
- அதில் தங்களுக்கு தேவையான வேகத்தை மற்றும் multisession disk போன்ற option கல்தரப்பட்டு இருக்கும் உங்களுடைய தேவையை பொறுத்து தெரிவு செய்க.பிறகு Write என்ற Buttonனை click செய்க
- வேலை முடிந்தபின்னர் CD வெளியே வரும்.