Pages

Friday, June 18, 2010

லினக்ஸ் வாசக உள்ளங்கள் படிக்க வேண்டிய இடுக்கை....

எனது வலைப்பூவையின் மேன்பாட்டுக்க லினக்ஸ் வாசககர்ளின் comments னை நான் மிகவும் எதிர்பார்த்தேன் ஒருவரும் என்னுடைய இடுக்கையை குறித்து comments னை எழுத வில்லை இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கும் விதமாக உள்ளது. என்னுடைய இடுக்கை எவ்வாறு தங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கின்றது என்பதை நான் தெரிந்கொள்ள முடிந்தால் தான் மேலும் நல்ல இடுக்கையை தர முடியும் ,எனது முந்தைய இடுகையான sound card driver னை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது? என்ற இடுகையை எழுத மற்றும் அதனை தெரிந்து கொள்ள எனக்கு 8 மணி நேரம் பிடித்தது நான் மிகவும் வாசக comments காக அதை எழுதினேன் ஒருவர் கூட comments எழுதவில்லை எனது மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது நான் லினக்ஸ் பற்றி எழுதுவதை நிறுத்தி விட்டு புதிய திரைப்படங்களை பற்றி எழுதலாம் என்று? ஏன்னென்றால் இன்றைய மாணவர்கள் திரைப்படங்களின் திரைவிமர்சனகளை எழுதினால் தானே தங்களின் comments எழுதுவார்கள். நான் ஒவ்வொரு இடுக்கையை எழுதும் போது இந்த இடுக்கை லினக்ஸ் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான் எழுதுவேன், ஏன்னென்றால் நான் மிகவும் நடுத்தர குடுப்பதில் இருந்து படிக்கும் மாணவன், லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள எனது வீட்டில் கூறியபோது தங்களின் கருத்துகளை கூறுவார்கள் அது என்ன கருத்து என்றால் பணத்தை அதிகம் செலவு செய்யாதே?பணத்தை நல்ல வேலைக்காக பயன்படுத்து? அந்த கருத்தே இந்த நிலைக்கு என்னை உருவாகியுள்ளது நான் பணத்தையும் சரி நேரத்தையும் சரி ஒரு நல்ல பயன்பாட்டுக்காக செலவிடுவேன். நான் ஒவ்வொரு பதிப்பையும் ஏன் தமிழில் எழுத வேண்டும்? எனக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாது என்று சிலர்க்கு ஒரு கேள்வி எழலாம்,உலக முழுவதும் அனைத்து தொழிநுட்பம் சார்ந்த செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது புதிதாக ஆங்கிலம் கற்றுகொள்ளும் மாணவன் அதை புரிந்து கொண்டு செயல் படுத்த கொஞ்சம் சிரமமாக இருக்கும், அதை தமிழில் நடைமுறை படுத்தினால் அதை படிக்கும் மாணவன் மிகவும் பயனடைவான் இந்த ஒரு காரணம் காரணமாகவே நான் தமிழில் இடுகையை எழுதுகின்றேன். தமிழில் தொழில் நுட்பம் சார்ந்த வலைப்பூவை எழுதும் நண்பர்கள் குறைவாகவே உள்ளனர் ஆனால் ஆங்கிலத்தில் இது அதிகம் தமிழை வளர்க மற்றும் லினக்ஸ் ஆர்வத்தை தமிழ் மாணவர்களிடம் ஏற்படுத்த ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுதுகின்றேன் ,இதுவே எனது இறுதி இடுக்கையா ? அல்லது தொடரும் இடுக்கையா? என்று தாங்கள் எழுதும் comments பொருத்து இருக்கும் நன்றி !

25 comments:

  1. hello boss ,

    ....pain will give gain ...Cheer up !

    ReplyDelete
  2. திரு.சந்திரசேகரன் ஏன் உணர்ச்சிவசப் படுகிறீர்கள்? நீண்ட நாளைக்குப் பிறகு இன்றுதான் நான் எந்தெந்த வலைப்பூவில் பதிவுசெய்திருக்கிறேன் என்ற பட்டியலைப் பார்த்தேன். அதில் தெரிந்த பட்டியல் மூலம் மறுபடியும் இந்த தளத்திற்கு வந்திருக்கின்றேன்.
    உங்கள் வலைப்பூவைப் பற்றித் தெரியவந்ததுமே(அறிய உதவியது - சுதந்திர இலவச மென்பொருள் ப்ளாக்) பி ன்தொடருவோர் பட்டியலில் இணைத்துக் கொண்டேனென நினைக்கின்றேன். தமிழில் உள்ள அத்தனை தொழில்நுட்ப வலைதளங்களையும், வலைப்பூக்களையும் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
    இதுவரை வேலை தேடுவதிலேயே பாதி நேரம் முடிந்து விட்டது. இனிமேல் படிக்க வாய்ப்பிருக்கும் போதேல்லாம் இதுபோன்ற பயனுள்ள தளங்களுக்கு கட்டாயம் வருவேன். படித்துவிட்டு வெறும் வார்த்தைகளால் மிகைப்படுத்தாமல், என் உண்மையான கருத்துக்க ளை பகிர்ந்து கொள்வேன்.

    எழுதுவதில் எனக்கு அனுபவமில்லை, இருப்பினும் எனது சில கருத்துகளைச் சொல்கிறேன்..
    //....என்ற இடுகையை எழுத மற்றும் அதனை தெரிந்து கொள்ள எனக்கு 8 மணி நேரம் பிடித்தது.// மன்னிக்கவும், எழுதுவதற்காக படிக்காதீ ர்கள். இது தேர்வு அல்ல. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டுமென்ற பரபரப்பு தேவையில்லை. நீங்கள் இயல்பாகப் படித்ததையும் உங்கள் சொந்த பார்வையினையும் எழுதுங்கள்.
    //...வாசக comments காக அதை எழுதினேன் ஒருவர் கூட comments எழுதவில்லை எனது மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது நான் லினக்ஸ் பற்றி எழுதுவதை நிறுத்தி விட்டு புதிய திரைப்படங்களை பற்றி எழுதலாம் என்று// மீண்டும் மன்னிக்கவும், நான் முன்னர் படித்ததிலிருந்து ஒன்றை சொல்கிறேன். திரு. ஜெயகாந்தன் சொன்னது "என் வாசகனுக்கு பிடித்ததை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. என் எழுத்தைப் படிப்பவன்தான் எனது வாசகனாக இருக்க முடியும்.” நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள், எழுதுவதன் நோக்கம் போன்ற கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

    http://tamilcpu.blogspot.com/2010/06/blog-post.html

    ReplyDelete
  3. //Fosstamil.blogspot.com அறிமுகத்திலேயே தரவரிசையில் இருபதாம் இடத்தை பெற்றுவிட்டார்.// இது சுதந்திர இலவச மென்பொருள் பிளாக்கில் இடம்பெற்ற வாசகம் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். அப்படியென்றால் எத்தனை பேர் உங்களுடைய வலைத்தளத்தை படிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.தொடர்ந்து எழுதுங்கள். நான் எழுத ஆரம்பித்தது நான் கற்று கொண்டதை பிறர்க்கு தரவேண்டும் என்ற நோக்கம் தான். கணினி முன் உட்கார்பவன் லினக்ஸ் எளிதாக இயக்க வேண்டும் என்பதற்க்காகவும் தான்.அதேபோல் tamilishல் இணைத்தது பலர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.அதே நேரத்தில் யாரேனும் தவறை சுட்டிக்காட்டி comments எழுதினால் நான் திருத்திகொண்டிருக்கிறேன். விண்டோஸ் பற்றி பலர் எழுதுகிறார்கள். ஆனால் லினக்ஸ் பற்றி எழுத ஒருசில தளங்களே உள்ளன.உங்களுக்கே தெரியும் சுதந்திர இலவச மென்பொருள் தளத்தில் உள்ள 30 வலைப்பக்கத்தில் லினக்ஸ்கென்று உள்ளது 4 அல்லது 5 தான். எனவே வருத்தம் வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  5. தங்கள் கருத்துகள் அனைத்திற்கும் மிக்க நன்றி எனது லினக்ஸ் சேவையை நிறுத்த மாட்டேன் தொடருவேன்!தமிழை வளர்பேன் நன்றி!!

    ReplyDelete
  6. yarum comment tharavillai eandru linux patri ealuthuvadhai niruthi vidathirkal....ungalal orutharuku payanulathaka irunthaleay padhum...unkaludaiya ooavaru padhivum payanuladhaka ulladhu....thadaravum pls

    ReplyDelete
  7. give ur mail id.........i should ask some question about linux

    ReplyDelete
  8. கவலையின்றித் தொடர்ந்து இயங்குங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட வரவேற்பும், அங்கீகாரமும் கிடைக்கும். வாழ்த்துக்கள். (Kindly remove word verification.)

    ஸ்ரீ....

    ReplyDelete
  9. அன்பரே உங்களின் 38 follwowerகள் உங்களது பதிவுகளை படிக்கிறார்கள் உங்களது பதிவுகளை எத்தனை போர் படிக்கிறார்கள் என்பதை பாரக்கவும் மேலும் இது போன்று கமேண்ட் வரவில்லை என்று கவலைபடாமல் தொடர்ந்து லினக்கஸ் பற்றி தொடர்ந்து எழுதவும் உங்களதி சுய விபரம் மற்றும் உங்களத்து தொடர்பு எண் கொடுத்து லினக்ஸ் பயனாளர்களுக்கு நீங்கள் உதவி செய்ய முடியும் இதுவும் உங்களது வாசர்கர்களை பெற முடியும் மேலும் முடிந்தவரை எல்லா திரட்டிகளிலும் இணைக்கவும் மேலும் கருத்துகளை என் மெயிலுக்கு அனுப்பவும் aisjfjvdkf textmails@gmail.com http://yourssnegan.blogspot.com/

    ReplyDelete
  10. பாஸ் உங்களது கமண்டில் word verification எடுக்கவும் கமண்ட் தானாக வரும்

    ReplyDelete
  11. நான் தற்போது windows மற்றும் linux பயன்படுத்தி வருகிறேன். windows க்கு நிறைய tips கிடைக்கிறது. ஆனால் லினக்ஸ் க்கு அதுபோல் கிடைப்பதில்லை. அதனால் தொடர்ந்து எழுந்துங்கள்.

    ReplyDelete
  12. //சினேகன் said...
    தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
    ஸ்ரீ...//
    தங்களின் பேராதரவு இருக்கும் வரை நான் எனது பயணத்தை தொடருவேன் நிறுத்த மாட்டேன்....

    ReplyDelete
  13. //arivu said...
    மிக்க நன்றி நண்பரே எனது மின்னஞ்சல் முகவரி fosstamil @gmail .com ,கேளுங்கள் நான் தருகின்றேன் நல்ல பதிலை

    ReplyDelete
  14. //Anonymous said...
    தங்களின் பெயரை வெளிபடுதாவிட்டாலும் தங்களின் கருத்துகளை போல் தான் நான் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி!

    ReplyDelete
  15. லி8னக்ஸ் குறித்து எழுதும் தமிழ் வலைப்பூக்கள், மிகச் சில..

    அதற்குப் பெருமை சேர்க்கிறது உங்களது வலைப்பூ :))

    நீங்கள் எழுதுவது ஒருவருக்கு மட்டுமே பயன்பட்டாலும் உங்களது நோக்கம் நிறைவேறியதாக பொருள் :))

    பின்னூட்டங்கள், பார்வையிடுபவர் எண்ணிக்கை என எதையும் எதிர்பார்க்காதீர்கள், அது தானாக வரும்.

    உங்கள் பங்களிப்பை மனநிறைவோடு ஆற்றுங்கள்..
    ஃபாலோயர் ஆகிவிட்டேன்.

    வாழ்த்துகள் நன்றி..

    முக்கியமான விசயம் கமெண்ட் செட்டிங் Word verification எடுத்துவிடவும், பின்னூட்டமிடுவோருக்கு அது தடை...

    ReplyDelete
  16. //நிகழ்காலத்தில்... said..
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //PC Tricks and Tips said...
    இப்படி நீங்க கூறுவதால் தான் இந்த நாடு இப்படி இருக்கு நன்றி தங்களின் கருத்துக்கு மேலும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் சுய நலதுடன் எல்லோரும் இருந்து இருந்தால் இவ்வுலகில் புதுமைகள் எதுவும் தோன்றி இருக்காது!!!!!!!!!!!

    ReplyDelete
  18. My wishes for your helping hand. i am now using windows 7 i am interested in switching over to Linux. Please let me know how to start with Linux?

    ReplyDelete
  19. நண்பரே நான் லினெக்ஸ் கற்க ஆவலாக உள்ளேன். எனக்கு எளிமையான அதைப் பற்றி கூற இயலுமா...?
    (எனக்கு விண்டோஸ் மட்டுமே தெரியும்)
    R Kanthasamy
    kanthanaar@gmail.com

    ReplyDelete
  20. //Anonymous said...
    லினக்ஸ் னை கற்றுக்கொள்ள விரும்பும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் லினக்ஸ் னை விண்டோஸ் னை விட மிக எளிதாக பயன்படுத்தும் விதமாக தற்பொழுது வரும் லினக்ஸ் பதிப்புகள் உள்ளது எனவே நீங்கள் கற்றுக்கொள்ள முயற்சியை எடுங்கள் நான் தங்களுக்கு உதவுகின்றேன் !

    ReplyDelete
  21. WE ARE READY TO TRAVEL WITH U
    SO....
    CONTINUE YOUR WORK..,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  22. //Anonymous said...
    Thanks for your comments then your name pls

    ReplyDelete
  23. உங்கள் சேவை தொடரட்டும் ...
    லினெக்ஸ் மிக அற்புதமான ஒன்று.
    பிள்கேட்ச் இப்போ குழம்பி இருப்பதும் இதை பார்த்துதான் .
    இது எல்லோருக்கும் சென்று சேர வேண்டும். நானும் பல நண்பர்களுக்கு சொல்லி இருக்கேன் பலபேருக்கு அதை நிறுவ தெரியாது .
    உண்மையை சொல்லப் போனால் உபுந்து கேழ்விப்பட்டு அதை நிறுவ முயற்சித்து தோல்விகண்டு பின்னர் ஒரு வருடத்தின் பின்னர் இப்போதுதான் சரியாக நிறுவினேன். எல்லையற்ற மகிழ்ச்சி.
    விண்டோஸ் 7 உடன் linux mint isadora வும் நிறுவி உள்ளேன்.
    வைரஸ் தொல்லைக்கு இப்போது ஒரு சிறந்த நிவாரணி
    மற்றும் பல கண்கவரும் வடிவமைப்பு.
    என் எல்லா தேவைகளும் அதில் உள்ளது
    ஆனால்
    என் Acer Laptop ல்
    என் Mouse Pad multi function உடையது Linux ல் multi function
    செயற்பாடு இல்லை
    மற்றது திரை வெளிச்சத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை.

    லினெக்ஸ் விண்டோசை போல் மக்கர் பண்ணுவது இல்லை
    அதி வேகமாக செயல் படுகிறது என்ற வகையில் எனக்கு மிகவும் பிடித்தது

    ReplyDelete
  24. தயவு செய்து உங்கள் சேவையை தொடருங்கள்..

    ReplyDelete