Pages

Monday, June 21, 2010

நீங்களும் லினக்ஸ் administrator ஆகலாம்!



""லினக்ஸ் ஒன்றை கற்றுகொள்!
இவ்வுலகை உனக்கென மாற்றிகொள்!! ""

என்ன இப்படி எல்லாம் சொல்லி எங்கள விண்டோஸ் இல் இருந்து லினக்சுக்கு மாற்றதிங்க என்று சில விண்டோஸ் னை நேசிக்கும் நண்பர்கள் கூறலாம்,அப்படி ஒன்றும் செய்ய மாட்டோம் சரி என்ன காரணம் லினக்சினை வெறுபதருக்கு என்று விண்டோஸ் பயன்னாலர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் நினைகின்றேன்.இந்த பதிப்பை விண்டோஸ் நேசிக்கும் நண்பர்கள் படித்தால் என்ன கரணம் என்று பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும்.

லினக்ஸ் பதிப்பின் முதன்மை நிறுவனமான redhat இதில் பயன்படும் அனைத்து command களையும் அதன் செயல் பாடுகளையும் தெரிந்து கொண்டாள் போதும் நீங்களும் ஒரு லினக்ஸ் administrator . இதை எப்படி கற்றுக்கொள்ளுவது ?மிக பெரிய லினக்ஸ் கற்றுக்கொடுக்கும் நிறுவனம் எது என்று கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தால் மட்டுமே நாம் linux administrator ஆக முடியாது. என்னுடை கருத்து என்னவென்றால் தங்களுடைய வீட்டையே ஒரு லினக்ஸ் கற்றுக்கொள்ளும் ஒரு நிறுவனமாக நினைத்து படித்தாலே போதும், எந்த ஒரு கணினி சார்ந்த படிப்பினை கற்றுகொடுக்கும் நிறுவனம் முழுமையாக கற்றுக்கொடுக்கும் என நினைப்பது ஒரு முட்டாள் தனம். நீங்கள் நிறுவனத்திடம் செலுத்தும் பணத்தை வைத்து ஒரு கணினி வாங்கினாலே போதும்!! கணினி வாங்கினால் மட்டும் போதாது அதை பயன்னுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு தகவல் போல தினமும் ஒரு லினக்ஸ் command னை பயன்படுத்தினால் போதும் ,அப்பொழுது நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள் அதன் பயன்பாடு என்ன என்பதை. சரி நீங்க இப்படி கூறிவிட்டீர்கள் command களை கற்க எங்கு செல்லவேண்டும் அதற்கு வழி எதுவும் உள்ளதா என்று கேள்வி எழும் அதைநிவர்த்தி செய்யவே நான் அந்த தளத்தின் பெயரை கிழே தந்துள்ளேன் .
இந்த தலத்தில் சென்று தங்களுக்கு தேவையான லினக்ஸ் மற்றும் லினக்சின் முன்னோடியான உனிக்ஸ் இல் பயன்படும் command களும் இற்றைய லினக்ஸ் பதிப்பில் உள்ள command களும் அதன் விளக்கங்களும் சேர்த்து ஒரு 10 வகையான command sheets ஆக தந்துள்ளனர் அதை download செய்து படித்து விட்டு கூறுங்கள் நானும் ஒரு லினக்ஸ் அட்மின் என்று!!!! வளர வாழ்த்துக்கள் நன்றி!!!!!!!!

5 comments:

  1. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. //suthanthira.co.cc said...//
    நன்றி சார்! நீங்கள் pc tricks and tips இன் தமிழ் blogspot சென்றால் தமிழ் எழுதுவது ஒரு வெட்டி வேலை என்றும் அதுவும் லினக்ஸ் பாற்றி எழுதுவது மிக பெரிய வெட்டிவேலை என்று ஒரு comments னை எனது வலைப்பூவையில் எழுதி உள்ளனர் அதற்க்கு தகுந்த comments னை தாங்கள் எழுத வேண்டும்.

    ReplyDelete
  3. நீங்க‌ளும் லின‌க்ஸ் ப‌ற்றி எழுதுவ‌து ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கு.
    ரெட் ஹேட் வாச‌ல் வ‌ரை போய் திரும்பி வ‌ந்துவிட்டேன் ஆனாலும் அவ்வ‌ப்போது ஆர்வ‌ம் அந்த‌ ப‌க்க‌ம் இழுக்கிற‌து.

    ReplyDelete
  4. நன்றி குமார் சார் அவர்களே! லினக்ஸ் பற்றி எழுத என்னை போல மாணவ சமுதாயம் தானாக முன் வரவேண்டும் அப்பொழுதான் லினக்ஸ் புரட்சியை ஏற்படுத்த முடியும்

    ReplyDelete
  5. //லினக்ஸ் பற்றி எழுத என்னை போல மாணவ சமுதாயம் தானாக முன் வரவேண்டும் அப்பொழுதான் லினக்ஸ் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

    கைகோர்த்து விழிப்புணர்வை உண்டாக்குவோம்.
    //நீங்கள் pc tricks and tips இன் தமிழ் blogspot சென்றால் ...
    அட விடுங்க...

    ReplyDelete