Pages

Tuesday, June 29, 2010

லினக்ஸ் Desktop இல் செய்யும் வேலையை வீடியோ வாக பதிவு செய்ய வேண்டுமா?


எனக்கு ரொம்ப நாலா ஒரு ஆசை என்னவென்றால் லினக்சில் நாம் ஒரு விண்டோ வை ஓபன் செய்தாலும் சரி அதை மூடினாலும் சரி அதை வீடியோ வாக பதிய வேண்டும் என்று,இதை நான் எதற்கு செய்ய வேண்டும் என்றல் நான் எழுதும் ஒவ்வொரு இடுகையை வீடியோ வாக தந்தாள் நன்றாக இருக்கும் என்று ஒரு ஆர்வம் தான். நான் எனது கணினியில் ஓராண்டுக்கு முன்பு இப்படி செய்து பார்த்த ஒரு நினைவு அதை ஒரு இடுகையாக எழுதலாம் என்று ஒரு ஆசை. இந்த வசதி பள்ளி கல்லூரிகளில் பாடம் நடத்த மற்றும் செய்தியை எடுத்து கூற மிகவும் பயன்படும் , ஒரு செய்தியை மற்றவர்களுக்கு எடுத்து கூர்வதை விட அதை திரையில் கான்பிதலே புரிந்து விடும் இது சொகுசும் கூட,இதை செய்ய நிறைய package கல் உள்ளது அதில் ஓன்று தான் istanbul , இதை பயன்படுத்தி பார்த்த பொழுது நான் மெய்சிலுர்த்து போனேன் நான் mouse னை move செய்தாலும் சரி ஒரு எழுத்தை type செய்தாலும் சரி அது அப்படியே பதிய படுகின்றது. இதன் தரம் ஒரு புதிய வீடியோ கேமரா வில் எடுத்தாலும் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை அப்படி ஒரு தெளிவு இத்துடன் ஒளியையும் சேர்த்து பதியும் வசதி உள்ளது,இதை பயன்படுத்தி பாருங்கள் நீங்களும் ஒரு புதிய அனுபவத்தை பெற்ற ஒரு சந்தோசம் ஏற்படும்.

இதனை உபுண்டு லினக்ஸ் னை பயன்படுத்தினால் .deb format இல் download செய்யவும்,redhat பயன்படுத்தினால் .rpm format இல் download செய்யவும்,மற்ற லினக்ஸ் பயன்னாளர்கள் binary file லாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.binary file னை எவ்வாறு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று ஒரு இடுகையை எழுதி உள்ளேன் அதை படித்தால் தாங்களுக்கு புரியும்.நீங்கள் இன்ஸ்டால் செய்த பின்னர் Application மெனு வில் ஆடியோ மற்றும் வீடியோ என்ற பிரிவில் இருக்கும்,அதை தேர்ந்தெடுத்த பின்னர் டாஸ்க்பார் இல் ஒரு சிவப்பு நிறத்தில் ஒரு வட்டம் தெரிவும் அதை கிளிக் செய்த பின்னர் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் record ஆகி கொண்டு இருக்கும் இது ஒரு ogg என்ற format இல் save ஆகும்.

இந்த package னை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்

உபுண்டு பயன்னாளர்கள் இங்கே கிளிக் செய்யவும்

இந்த tool இன் மகிமை tutorial வீடியோ வை உருவாக்கும் நண்பர்களுக்கு தெரியும் மேலும் ஒரு செய்தி இது முழுவதும் இலவசம். எனது இடுகையுடன் நான் செய்யும் வேலையை இவ்வாறு வீடியோ வாக தரலாம் தான் அதற்கான இணைய வேகம் போதாது நான்றி நண்பர்களே!

Friday, June 25, 2010

லினக்ஸ் emulator ஒரு பார்வை......


  • emulator பற்றி லினக்ஸ் பயன்னார்லர்களுக்கு பலர்க்கு தெரியும் சிலருக்கு தெரியாது அதை கூறவே இந்த இடுக்கையை எழுதுகின்றேன் emulator என்பது ஒன்றும் இல்லை மற்ற இயங்குதளத்தினை example windows ,mac போன்றவற்றையும் மற்றும் அதன் application கலையும் லினக்ஸ் மற்றும் உனிக்ஸ் இல் இயங்க செய்ய உதவும் ஒரு டூல்ஸ் அல்லது Application என்றும் சொல்லலாம்,மிகவும் தெரிந்த ஒன்று wine , vmware workstation , vmplayer vm பிளேயர்,மற்றும் vm workstation மற்ற இயங்குதலத்தை லினக்ஸ் இல் பயன்படுத்த உதவுகின்றது ,wine உதவி என்னவெற்றால் விண்டோஸ் இல் பயன்படுத்தும் application கலை லினக்ஸ் இல் பயன்படுத்த உதவிபுரியும்,micro emulator என்று ஒன்று இருக்கின்றது இது மொபைல் application கலை அதாவுது .jar ,jad போன்ற file கலை லினக்ஸ் இல் பயன்படுத்த உதவுகிறது.இதை தவிர நிறைய emulator கல் உள்ளது அவைகளின் பெர்யரை கிழே தந்துலேன்.எனது வாசகர் ஜெயதேவ அவர்களே தங்களுக்கு ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றே மற்ற எந்த ஒரு operating system இல் இந்த வசதிகள் இல்லை நான் இந்த ஒவ்வொரு எமுலடோர்களை பற்றி இடுகையாக எழுதினால் ஒரு மாதம் முழுவதும் எழுதினாலும் எழுத முடியாது,நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் எந்த இயங்குதளத்தில் மொபைல் application நும் பயன்படுத்த அனுமதிகின்றது கூறுங்கள் பாப்போம்,எனது ஒரு இடுகையில் எப்படி opera mini யை உபுண்டு வில் பயன்படுத்துவது என்ற இடுகையை படித்தால் தாங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்ன தெளிவு என்றால் எதையும் செய்யலாம் லினக்ஸ் இல் என்று. எனக்கு போதிய நேரம் இல்லாத காரணங்களில்னால் தாங்களின் பின்நூன்ட்டகளுக்கு பதில் அளிக்க முடிய வில்லை எனது பல்கலைகழக தேர்வு முடிந்த பிறகு அனைத்து பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கப்படும் நன்றி!
  • atarux
  • Athene
  • Axe
  • Basilisk II
  • Bochs
  • ckmame
  • DOSemu
  • ec64
  • EVBU
  • Executor
  • FakeNES
  • Frodo
  • Generator
  • gnuboy
  • gRustibus
  • GHu-Go!
  • TuxNES
  • iNES
  • InfoNES
  • lxrun
  • MAMECAT
  • MMX Emulator
  • mol
  • NEStra
  • PHFC
  • Replay+ Arcade Emulator
  • Riscose
  • Snes9x
  • Sope
  • spectemu
  • spim
  • Steem
  • Wine
  • Virtual X68000
  • Xmame/xmess
  • XZip
  • ZX81 / TS1000 Emulator

Tuesday, June 22, 2010

லினக்சில் நீங்கள் install செய்த package னை backup மற்றும் restore செய்ய...

லினக்ஸ் இல் நாம் புதிய புதிய package னை online இல் டவுன்லோட் செய்து install செய்துவிடுவோம் சில காலங்களுக்கு பிறகு ஏதேனும் சில காரங்களில்னால் நம்முடைய லினக்ஸ் பதிப்பை reinstall செய்ய நேரும் அந்த சமயத்தில் ஏற்கனவே பயன்படுத்திய மிக முக்கிய package னை இணைய இணைப்பை கொண்டு டவுன்லோட் செய்ய வேண்டும் இவ்வாறு செய்ய தேவை இல்லை இதனை தவிர்க்க APTonCD என்ற tool உதவுகின்றது இதன் மொத்த கொள்ளவு வெறும் 600kb இதன் செயல் பாடோ பன்மடங்கு அதிகம்,இந்த APTonCD வருகையால் வேலை நேரம் மிச்சம்,இது ஏற்கனவே install செய்த package னை file ஆக cd அல்லது DVD இல் write செய்கின்றது.இதன் விளக்க படம் பின்வருமாறுஇதனை பயன்படுத்துவது மிகவும் எளிது தங்களுடை லினக்ஸ் சிஸ்டம் இல் புதிதா இன்ஸ்டால் செய்த package மற்றும் tool களை இது திரையில் காண்பிக்கும் அதில் தாங்கள் எந்த எந்த package னை backup செய்ய வேண்டுமோ அதனை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் பிறகு அதனை தெரிவு செய்து கொள்க,பின்னர் cd அல்லது dvd யை டிரைவ் இல் insert செய்த பின்னர் burn என்ற button னை கிளிக் செய்தால் போதும் தங்களின் package cd இல் write செய்யபட்டிற்க்கும்,இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் எந்த பதிப்பில் நீங்கள் backup செய்தததோ அந்த பதிப்பில் மட்டுமே restore செய்ய முடியும்.

லினக்ஸ் உள்ள குப்பை பெருக்கி..




விண்டோஸ் நிறைய குப்பை பெருக்கிகள் உள்ளது ஆனால் லினக்சில் உள்ளதா என்று கேள்வி எலகூடாது என்பதற்காக நான் இந்த இடுகையை எழுதுகிறேன் ,குப்பை பெருக்கி என்றவுடன் ccleaner தான் விண்டோஸ் இல் நினைவிற்கு வரும் இதன் பயன்பாடு கணினி வைத்துள்ள அனைத்து நண்பர்களும் அறிவர்,இருந்தாலும் கூறுகின்றேன் குப்பை என்பது நாம் ஒரு application மற்றும் எந்த ஒரு process செய்யும் போது அந்த process க்கு தகுந்தவாறு ஒரு support process ரன் ஆகும் இது நமக்கு தெரியாது. இந்த supported process temp file களை ஏற்படுத்தும் இந்த file temp என்ற folder இல் விண்டோஸ் இல் save ஆகிவிடும் மற்றும் நாம் இணையம் பயன்படுத்துபவராக இருந்தால் webhistory அனைத்தும் save ஆகிவிடும் இதனால் நமது கணினியின் வேகம் சற்று குறைவாக இருக்கும் இந்த temp மற்றும் தேவை இல்லாத file களை இந்த ccleaner tool நீக்குகின்றது இதனால் கணினி வேகம் பெரும்,இதே வேலையை நம்முடைய லினக்ஸ் செய்வது யார் என்றால் sweeper என்ற சிறப்பான tool ஆகும்,இது webhistory மற்றும் temp delete file களை நீக்கி நமது லினக்ஸ் னை சிறுது வேகம் பெற செய்கின்றது.அதன் படம் பின்வருமாறு.சில application ரன் ஆக temp file கல் தேவை application ரன் ஆகும் இந்த sweeper னை ரன் செய்ய வேண்டாம் அப்படி செய்தால் தற்சமையம் ரன் ஆகும் application close ஆகிவிடும்.

இணைய video வை play செய்யும் 10 open source media player ....

இன்றைய காலத்தில் இணைய வீடியோ வை பார்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது,நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரே ஒரு பிளேர் அது adobe flash player தான்,இதை தவிர வேறு பிளேயர் கல் இல்லையா என்று ஒரு சந்தேகம் இருந்தது,அதை தெளிவு படுத்த நான் google இல் தேடினேன் அதில் பல பிளேயர் கல் இருகின்றது அதில் நான் open source media player களின் மட்டும் இந்த இடுகையில் கூரபோகின்றேன்,இது இணையதல வீடியோ வை பார்க்க உதவும் இதன் வேகம் மிக சிறப்பு,ஒவ்வொன்றும் ஒரு ஒரு வடிவில் உள்ளது இதை open soruce developer சேர்ந்து வடிவமைத்துள்ளனர் அதன் பெயர்கள் பின்வருமாறு.
1.OSM Player2.FlowPlayer3.PodSnack4.ToobPlayer5.JW FLV Player6.SilverLight7.OSMF8.Miro9.JCPlayer10.Kaltura

என்ன இல்ல? windows இல் இருப்பது லினக்சில் ...

எதுவுமே லினக்சில் இல்லை விண்டோஸ் இல் இருப்பது போல என்று விண்டோஸ் ஆர்வலர்கள் ஊருக்குள்ள சொல்லிகொள்கின்றனர் அது அவர்களின் அறியாமை என்று தான் நான் கூறுவேன்,operating system இல் புதுமைகளை சேர்ப்பது லினக்ஸ் இது யாரும் இல்லன்னு சொல்ல முடியாது ஒரு விஷயம்,லினக்ஸ் என்பது ஒரு command கொண்டு இயங்கும் ஒரு operating system என்றும் வெறும் கருப்பு திரையாக உள்ள ஒரு இருட்டு அறை

என்று விண்டோஸ் பயன்னாளர்கள் புதிய கணினி பயன்னாலர்களுக்கு கூறி கூறி அவர்களும் அப்படி தானா என்று நினைக்கும் விதமாக மாற்றிவிடுகின்றனர்.இது வரை தமிழில் லினக்ஸ் பற்றி எடுத்து கூற ஒரு தமிழ் மாதயிதழ் ஒன்றும் வரவில்லை இதுவே ஒரு பெரிய பின்னடைவாக லினக்ஸ் க்கு உள்ளது,விண்டோஸ் பற்றி எடுத்து கூற நூற்றுக்கும் மேலான மாதயிதழ் உள்ளது.லினக்ஸ் பற்றி தமிழில் எடுத்துரைக்க ஒன்றும் இதுவரை இல்லை, linux for you ,pc quest ,linux journel போன்ற ஆங்கில மாதயிதழ் மட்டுமே உள்ளது.இதை கருத்தில் கொண்டு தமிழ் லினக்ஸ் பற்றி தகவல் அடங்கிய மாதயிதழ் வெளியிடலாம் என்ற ஒரு எண்ணம் எங்கள் குழுமத்தில் உள்ளது,புத்தகம் வெளியீடு வதற்கான செயல்பாடுகள் அனைத்தும் நடந்த வண்ணம் உள்ளது புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்று வாசர்கள் தங்களின் கருத்துகளை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,புத்தகம் எழுது வதற்க்கான விதிமுறைகள் மற்றும் பதிப்புரிமைகளை பற்றி அனுபவம் நிறைந்தவர்கள் கூறினால் மிக மிக பயன்னுள்ளதாக இருக்கும் மேலும் தமிழில் லினக்ஸ் புரட்சியை ஏற்படுத்த இது உதவும்.

சரி நான் சொல்ல வந்த விசயத்தையே சொல்லி விடுகின்றேன் விண்டோஸ் regeditor போல லினக்ஸ் இல் regeditor இல்லை என்ற ஒரு செய்தியை எனது நண்பர்கள் மூலம் கேள்வி பட்டேன் அதற்கான விடையத்தை இதில் நான் தருகின்றேன் அது அனைத்தும் தவறான செய்தி விண்டோஸ் இல் உள்ள regeditor போலவே லினக்சிலும் regeditor உள்ளது அதை நீங்கள் இதுவரை தெரிந்துகொள்ள வில்லை.லினக்சில் டெர்மினல் சென்று gconf -editor என்று type செய்தால் போதும் regeditor open ஆகிவிடும்,இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் விண்டோஸ் இல் உள்ள regeditor போல் இல்லாமல் மிக எளிதாக இருக்கும்! விண்டோஸ் பயன்னாலராக இருந்தால் இதை செய்து பாருங்கள் உங்களுகே தெரியம் எது சிறந்தது என்று. லினக்ஸ் regeditor படம் பின்வருமாறு,

பண்டைய கூற்றே கூறி கொண்டு இருக்க வேண்டியதுதான் லினக்சினை பயன்படுத்துவது கடினம் கடினம் என்று நான் கூறுகின்றேன் ஒரு முறை நின்றிய லினக்ஸ் க்கு வந்து பாருங்கள் புதிய உலகத்தை அடைந்த சந்தோசம் ஏற்படும்! கடினம் கடினம் என்று நினைத்தால் கணினி என்றஒரு சாதனம் இன்றைய உலகில் வந்து இருக்காது, சரி உதாரணம் ஒன்றை கூறுகின்றேன் ஒருவீட்டை ஒருவாறு கட்டினால் மிகவிரைவாக வீடு கட்டப்படும்மா? இல்லை பல பேர் சேர்ந்துகட்டினால் வீடு விரைவில் கட்டப்படுமா? அதை போல தான் லினக்சும் open source developer ஓன்று சேர்ந்து கட்டும் ஒரு இயங்குதளம் தான் "லினக்ஸ்".....

நீங்கள் விண்டோஸ் இல் ஒரு pdf file படிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான Application இன்ஸ்டால் செய்ய வேண்டும் ஆனால் லினக்சில் எல்லா பதிப்பிலும் default ஆக package னைதந்துள்ளனர் மேலும் wordprocess மற்றும் excel போன்ற office work க்கு தேவையான Msoffice னை விண்டோஸ் நிறுவனம் பணத்திற்கு விற்கின்றது ஆனால் லினக்ஸ் இல் free யாக தந்து அதைபயன்படுத்தும் விதிமுறைகளும் தருகின்றனர்.

ஒரு மனிதன் உயிர் வாழ தேவை உணவும் தண்ணீரும் தான்,கணினியின் உயிராக கருதபடுவதுடிரைவர் கல் தான் விண்டோஸ் இல் driver கல் default டாக தரவில்லை ஆனா லினக்ஸ் இல் ஒருகணினிக்கு தேவையான அனைத்தையும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கின்றனர்,சரிஇதை படிக்கும் நாண்பர்கள் கூறுங்கள் விண்டோஸ் இல் இல்லையா? இல்ல லினக்ஸ் இல்இல்லையா? என்று!! நன்றி

Monday, June 21, 2010

நீங்களும் லினக்ஸ் administrator ஆகலாம்!



""லினக்ஸ் ஒன்றை கற்றுகொள்!
இவ்வுலகை உனக்கென மாற்றிகொள்!! ""

என்ன இப்படி எல்லாம் சொல்லி எங்கள விண்டோஸ் இல் இருந்து லினக்சுக்கு மாற்றதிங்க என்று சில விண்டோஸ் னை நேசிக்கும் நண்பர்கள் கூறலாம்,அப்படி ஒன்றும் செய்ய மாட்டோம் சரி என்ன காரணம் லினக்சினை வெறுபதருக்கு என்று விண்டோஸ் பயன்னாலர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் நினைகின்றேன்.இந்த பதிப்பை விண்டோஸ் நேசிக்கும் நண்பர்கள் படித்தால் என்ன கரணம் என்று பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும்.

லினக்ஸ் பதிப்பின் முதன்மை நிறுவனமான redhat இதில் பயன்படும் அனைத்து command களையும் அதன் செயல் பாடுகளையும் தெரிந்து கொண்டாள் போதும் நீங்களும் ஒரு லினக்ஸ் administrator . இதை எப்படி கற்றுக்கொள்ளுவது ?மிக பெரிய லினக்ஸ் கற்றுக்கொடுக்கும் நிறுவனம் எது என்று கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தால் மட்டுமே நாம் linux administrator ஆக முடியாது. என்னுடை கருத்து என்னவென்றால் தங்களுடைய வீட்டையே ஒரு லினக்ஸ் கற்றுக்கொள்ளும் ஒரு நிறுவனமாக நினைத்து படித்தாலே போதும், எந்த ஒரு கணினி சார்ந்த படிப்பினை கற்றுகொடுக்கும் நிறுவனம் முழுமையாக கற்றுக்கொடுக்கும் என நினைப்பது ஒரு முட்டாள் தனம். நீங்கள் நிறுவனத்திடம் செலுத்தும் பணத்தை வைத்து ஒரு கணினி வாங்கினாலே போதும்!! கணினி வாங்கினால் மட்டும் போதாது அதை பயன்னுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு தகவல் போல தினமும் ஒரு லினக்ஸ் command னை பயன்படுத்தினால் போதும் ,அப்பொழுது நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள் அதன் பயன்பாடு என்ன என்பதை. சரி நீங்க இப்படி கூறிவிட்டீர்கள் command களை கற்க எங்கு செல்லவேண்டும் அதற்கு வழி எதுவும் உள்ளதா என்று கேள்வி எழும் அதைநிவர்த்தி செய்யவே நான் அந்த தளத்தின் பெயரை கிழே தந்துள்ளேன் .
இந்த தலத்தில் சென்று தங்களுக்கு தேவையான லினக்ஸ் மற்றும் லினக்சின் முன்னோடியான உனிக்ஸ் இல் பயன்படும் command களும் இற்றைய லினக்ஸ் பதிப்பில் உள்ள command களும் அதன் விளக்கங்களும் சேர்த்து ஒரு 10 வகையான command sheets ஆக தந்துள்ளனர் அதை download செய்து படித்து விட்டு கூறுங்கள் நானும் ஒரு லினக்ஸ் அட்மின் என்று!!!! வளர வாழ்த்துக்கள் நன்றி!!!!!!!!

slackware linux இப்படியும் இருக்குமா!!!!!!!!!!!


அனைத்து லினக்ஸ் பிரியரும் தங்களின் பார்வையை Debian ,ubuntu ,redhat , ...etc போன்ற பிரபல லினக்ஸ் பதிப்புகளில் திசை திருப்புகின்றனர் அதனால் இந்த slackware பற்றி தெரியாமல் போயிற்ரு.நான் சில நாட்களுக்கு முன்பு linux journal என்ற லினக்ஸ் மாத இதழை படித்தேன் அதில் இந்த slackware 13 .1 இன் மகத்துவத்தை மிக தெள்ள தெளிவாக அதில் சொல்லப்பட்டு இருந்தது அதை பற்றி ஒரு இடுகையாக எழுதிவிடலாம் என்று நான் முயற்ச்சி செய்தேன் சில காரணங்களினால் எழுத முடிய வில்லை ஒரு நல்ல பதிப்பை தங்களுக்கு தந்துவிடலாம் என்று நினைத்தேன் அது இந்த இடுகையின் மூலம் அது நிறைவேறும் என்று நினைகின்றேன். slackware என்பது டெபியன் சார்ந்த லினக்ஸ் பதிப்பு ஆகும் இதில் புதுமைகள் அனைத்தும் இதில் சேர்க்க பட்டுள்ளது ""பழையன களைந்து புதுமைகள் இதில் சேர்கப்பட்டுள்ளது"". இதில் புதுமைகள் எதை பற்றி கூறுகின்றிர்கள் என்று நீங்கள் நினைக்கலாம் இதில் Desktop manager ரான KDE மற்றும் Xfce இவையிரண்டும் மேன்படுதப்பட்டுள்ளது இதுவே இந்த லினக்ஸ் பதிப்புக்கு பெருமையை தேடித்தந்துள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த அனைத்து குறைகளையும் களைந்துள்ளனர் ,முதல் குறையான ஒரு pendrive அல்லது விண்டோஸ் file system னை access செய்ய ரூட் privileges தேவை ஆனா இந்த பதிப்பில் அது நீக்கப்பட்டுள்ளது, package கலை online இருந்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று இல்லை டெபியன் சார்ந்த அனைத்து package கலையும் off line இல் இன்ஸ்டால் செய்யும் விதமாக இதில் package manager மேன்படுதபட்டுள்ளது. அனைத்து புதிய மற்றும் பழைய hardware device க்கு தேவையான டிரைவர் கல் அனைத்தும் இதில் update செய்யப்பட்டுள்ளது.பழைய slackware install செய்வதருக்கு நிறைய ஸ்டேப் மற்றும் கடினமாகவும் இருந்தது அவை அனைத்தும் இந்த பதிப்பில் குறைக்கப்பட்டுள்ளது.ஒரு சந்தோசமான விசையம் என்னவென்றால் Multimedia package அனைத்தும் அட்டகாசமாக இதில் மேன்படுதபட்டுள்ளது மேலும் kernel version 2 .6 .33 .4 ஆக உள்ளது.இதன் நன்மைகள் முழு லினக்ஸ் அனுபவம் மற்றும் துல்லியமான வேகம்,குறை என்று சொல்ல போனால் இதில் பழைய LILO Boot loader னை பயன்படுத்தி உள்ளனர் இவை மட்டும் தான் இதன் குறை மற்ற எல்லாம் அனைத்தும் சூப்பர்!!

சூடான லினக்சா VS விண்டோச்சா வினோத பின்னூட்டம் எழுதும் போட்டி கலந்துகொள்ள வாருங்கள்......


தங்களின் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பற்றிய கருத்துகளையும் குறைபாடுகளையும் இந்த இடுகையில் எழுதலாம்,கருத்துகள் அனைத்தும் தெளிவாகவும் உதார்ணங்களுடன் இருந்தால் மிகவும் நன்று தொடருங்கள் தங்களின் பின்னுட்டம் எழுதுவதை ..............நன்றி!

Sunday, June 20, 2010

அடேங்கப்பா இப்படியும் ஒரு operating system ஆ......



என்ன இடுக்கையின் தலைபே புதுமையாக இருக்கின்றது என்று எல்லோருக்கும் ஒரு எண்ணம் மனதில் தோன்றும் ஆமாம் நண்பர்களே லினக்ஸ் தான் வேறு எதை பற்றி சொல்ல போறேன்.இந்த இடுக்கை எல்லா விண்டோஸ் பயன்னாலர்களும் படிக்க வேண்டியா மிக முக்கியமான இடுக்கை, லினக்சின் நன்மைகளும் அதன் பயன்பாடும் தான்.

விண்டோஸ்
பயன்பாட்டாளார்கள் லினக்ஸ் operating system னை ஒரு நெல்லி கனியை போல நினைக்க வேண்டும் நெல்லி கனி முதலில் கசப்பாக தான் இருக்கும் பிறகு அது இனிக்கும் அதுபோலதான் லினக்சும். முதலில் பயன்படுத்த கடினமாக இருக்கும் என்று சிலர் கூரிகொல்கின்றனர் அவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான்,சிறிய குழந்தை கூட மிக எளிதாக இயக்கும் விதமாக தற்பொழுது வெளிவரும் லினக்ஸ் பதிப்புகள் அனைத்தும் உள்ளது.

விண்டோஸ்
புது புது பதிப்புகள் வெளிவந்தாலும் வைரஸ் என்ற சொல்லை எப்பொழுதும் விண்டோஸ் பயன்பாட்டாளர்கள் மறக்க மாட்டார்கள்,இந்த தொல்லை லினக்ஸ் operating system இல் இல்லை . விண்டோஸ் இல் வைரஸ் சொல்லை இருந்தாலும்? அதை விரட்ட நிறைய வைரஸ் விரட்டிகள் இருந்தாலும்? அந்த வைரஸ் விரட்டிகளை தேர்ந்தெடுபதர்க்குள் நாம் ஒரு வலியாகிவிடுவோம்,சரி அது அப்படி இருக்க வைரஸ் விரட்டிகளை தொகை செலுத்தி வாங்க வேண்டும்,அந்த தொகை இருந்தால் நாம் 2010 புதிய லினக்ஸ் பதிப்புகளை டவுன்லோட் செய்து விடலாம்.

லினக்ஸ்
என்பது ஒரு free open soruce system ஆகும் இதில் நீங்கள் தொகையும் செலுத்த வேண்டாம்! ஒரு வலியாகவும் வேண்டாம்! ஏன் என்றால் லினக்ஸ் எந்த ஒரு வைரஸ் file களும் எந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தாது.லினக்ஸ் file format கல் அனைத்தும் மிகவும் புதியது ஆனால் விண்டோஸ் அப்படியல்ல பண்டைய file format .exe தான் இதுவே வைரஸ் developer களுக்கு சாதகம்! windows க்கு பாதகம்!.

ஒவ்வொரு
open soruce application களும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றது ஆனால் விண்டோஸ் சார்ந்த application அனைத்தும் ஒரு மரண தொகையையை செலுத்தி வாங்க வேண்டும். உலகம் முழுவதும் விண்டோஸ் இல் இருந்து லினக்ஸ் க்கு மாறி வருகின்றது நீங்கள் எப்பொழுது லினக்ஸ் க்கு மாறுவீர்கள்?உதாரணம் நாம் அறிந்த ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நிறுவனம் NASA வில் லினக்ஸ் தான் பயன்படுதுகின்றனர் அவ்வளவு பெரிய நிறுவனத்தில் பயன்படுத்தும் பொழுது நாம் நமது கணினியில் பயன்படுத்தினால் தவறு ஒன்றும் இல்லையே?.வளர்ந்து வரும் இந்த உலகில் புதிய தொளில்நூட்பம் சார்ந்த application அனைத்தும் முதலில் லினக்ஸ் தான் அறிமுகம் செய்கின்றனர்,அதுவும் இலவசம்! ,சில விண்டோஸ் application கல் இலவசம் என்று கூறிவிட்டு பணம் பறிக்கும் விதமாக எந்த ஒரு செயல் லினக்ஸ் இல் இல்லை.மிக பொரிய தொல்லை என்னவென்று விண்டோஸ் பயன்னாளற்கு தெரியும் டிரைவர் பிரச்சனை,நீங்கள் எந்தவித டிரைவர் களும் லினக்ஸ் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்த பின்னரும் சரி முன்பும் சரி இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.விண்டோஸ் வேகத்தை விட இருமடங்கு அதிகம்.சரி நீங்கள் விண்டோஸ் பயன்னாலரா இந்த வாக்கியத்தை படிங்கள்

""
புதிய தலைமுறை லினக்சே !
புதிய மென்பொருள் பிறப்பிடம் லினக்சே!!
புதுமையின் அடையாளம் லினக்சே!
ஆராய்ச்சியில் லினக்சே!!
அறிவை வளர்ப்பது லினக்சே!!!
NASA வில் லினக்சே!!!
உங்கள் கணினியில்? "

என்ன என்பதை நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள் நன்றி வாணக்கம்!

Friday, June 18, 2010

லினக்ஸ் வாசக உள்ளங்கள் படிக்க வேண்டிய இடுக்கை....

எனது வலைப்பூவையின் மேன்பாட்டுக்க லினக்ஸ் வாசககர்ளின் comments னை நான் மிகவும் எதிர்பார்த்தேன் ஒருவரும் என்னுடைய இடுக்கையை குறித்து comments னை எழுத வில்லை இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கும் விதமாக உள்ளது. என்னுடைய இடுக்கை எவ்வாறு தங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கின்றது என்பதை நான் தெரிந்கொள்ள முடிந்தால் தான் மேலும் நல்ல இடுக்கையை தர முடியும் ,எனது முந்தைய இடுகையான sound card driver னை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது? என்ற இடுகையை எழுத மற்றும் அதனை தெரிந்து கொள்ள எனக்கு 8 மணி நேரம் பிடித்தது நான் மிகவும் வாசக comments காக அதை எழுதினேன் ஒருவர் கூட comments எழுதவில்லை எனது மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது நான் லினக்ஸ் பற்றி எழுதுவதை நிறுத்தி விட்டு புதிய திரைப்படங்களை பற்றி எழுதலாம் என்று? ஏன்னென்றால் இன்றைய மாணவர்கள் திரைப்படங்களின் திரைவிமர்சனகளை எழுதினால் தானே தங்களின் comments எழுதுவார்கள். நான் ஒவ்வொரு இடுக்கையை எழுதும் போது இந்த இடுக்கை லினக்ஸ் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான் எழுதுவேன், ஏன்னென்றால் நான் மிகவும் நடுத்தர குடுப்பதில் இருந்து படிக்கும் மாணவன், லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள எனது வீட்டில் கூறியபோது தங்களின் கருத்துகளை கூறுவார்கள் அது என்ன கருத்து என்றால் பணத்தை அதிகம் செலவு செய்யாதே?பணத்தை நல்ல வேலைக்காக பயன்படுத்து? அந்த கருத்தே இந்த நிலைக்கு என்னை உருவாகியுள்ளது நான் பணத்தையும் சரி நேரத்தையும் சரி ஒரு நல்ல பயன்பாட்டுக்காக செலவிடுவேன். நான் ஒவ்வொரு பதிப்பையும் ஏன் தமிழில் எழுத வேண்டும்? எனக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாது என்று சிலர்க்கு ஒரு கேள்வி எழலாம்,உலக முழுவதும் அனைத்து தொழிநுட்பம் சார்ந்த செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது புதிதாக ஆங்கிலம் கற்றுகொள்ளும் மாணவன் அதை புரிந்து கொண்டு செயல் படுத்த கொஞ்சம் சிரமமாக இருக்கும், அதை தமிழில் நடைமுறை படுத்தினால் அதை படிக்கும் மாணவன் மிகவும் பயனடைவான் இந்த ஒரு காரணம் காரணமாகவே நான் தமிழில் இடுகையை எழுதுகின்றேன். தமிழில் தொழில் நுட்பம் சார்ந்த வலைப்பூவை எழுதும் நண்பர்கள் குறைவாகவே உள்ளனர் ஆனால் ஆங்கிலத்தில் இது அதிகம் தமிழை வளர்க மற்றும் லினக்ஸ் ஆர்வத்தை தமிழ் மாணவர்களிடம் ஏற்படுத்த ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுதுகின்றேன் ,இதுவே எனது இறுதி இடுக்கையா ? அல்லது தொடரும் இடுக்கையா? என்று தாங்கள் எழுதும் comments பொருத்து இருக்கும் நன்றி !

Thursday, June 17, 2010

உபுண்டு 10 .4 இல் எவ்வாறு cairo dock னை இன்ஸ்டால் செய்வது?


உபுண்டு ஒரு விசேசமான ஒரு லினக்ஸ் operating system இதில் விண்டோஸ் 7 இல் உள்ள அணைத்து வசதிகளையும் அதற்கு மேலான வசதிகளை கொண்டுள்ளது.விண்டோஸ் 7 இல் மிகவும் பயன்னாலர்களை கவர்ந்த ஒன்று dock ,ஆனால் இந்த வசதி உபுண்டு 8 .04 இல் இருந்தே உள்ளது அதை நாம் அறியாமல் இருந்து விட்டோம் இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம் .dock என்பது ஒரு டாஸ்க் பார் னை போல ஒரு plugin ஆகும் ,இதில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் application களின் shortcut னை ஏற்படுத்தலாம்.இந்த dock வசதி அனைத்து உபுண்டு பதிப்பில் default ஆக தரப்படவில்லை நாமாக அதை install செய்ய வேண்டும்.இந்த dock னை இரண்டு முறையில் இன்ஸ்டால் செய்யலாம் command line மற்றும் தனி deb package மூலமாகவும் install செய்ய முடியும் .
deb வடிவில் இன்ஸ்டால் செய்தவதற்கு முன்பு சில package னை இன்ஸ்டால் செய்ய வேண்டும் இன்ஸ்டால் செய்ய பின்வரும் command line னை terminal இல் type செய்யவும் .
  • sudo apt-get install libcairo2 librsvg2-2 libglitz1 libglitz-glx1 .
இந்த dock னை .deb என்றவாறு டவுன்லோட் செய்யவேண்டும் அதை இரண்டு முறை double கிளிக் செய்தால் போதும் அதுவாகவே இன்ஸ்டால் செய்யும். .deb வடிவில் download செய்ய இங்கே கிளிக்
செய்யவும் .command லைன் மூலமாக install செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.முதலில் டெர்மினல் ஓபன் செய்து gksudo gedit /etc/apt/sources.list என type செய்யவும் பின்னர் password னை நீங்கள் கொடுக்கவும் பிறகு கிழே உள்ள படம் தோன்றும் அதில் பின்வரும் command லயனை paste செய்து save செய்யவும்
  • deb http://repository.glx-dock.org/ubuntu karmic cairo-dock # For Ubuntu 9.10
  • deb http://repository.glx-dock.org/ubuntu jaunty cairo-dock # For Ubuntu 9.04
  • deb http://repository.glx-dock.org/ubuntu intrepid cairo-dock # For Ubuntu 8.10
  • deb http://repository.glx-dock.org/ubuntu hardy cairo-dock # For ubuntu 8.04
பின்னர் wget -q http://repository.glx-dock.org/cairo-dock.gpg -O- | sudo apt-key add - இந்த லைன் terminal இல் type செய்யவும் ஒரு message திரையில் ok என்று தோன்றும் பிறகு டெர்மினல் இல் பின்வரும் line type செய்யவும்
  • sudo apt-get update
  • sudo apt-get install cairo-dock cairo-dock-plug-ins
இன்ஸ்டால் செய்த பிறகு Application menu கிளிக் செய்து accessories இல் cairo dock னை தேர்ந்தெடுக்கவும் எனது கணினியில் தோன்றும் cairo dock .
குறிப்பு :-
இந்த பதிப்பை பற்றிய கருத்துகள் தெரியப்படுத்தவும்.....

உபுண்டு ஒரு பார்வை



உபுண்டு வை நான் மூன்று ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன் ஒவ்வொரு பதிப்பிலும் தங்களின் கால் தடங்களை பதித்து பதித்து தற்பொழுது உச்சி நிலையை அடைந்துள்ளனர்.உபுண்டு லினக்ஸ் மாணவர்களுக்கு ஆற்றும் தொண்டோ மிகவும் போன்றும் படியாக உலகம் முழுவதும் இருக்கின்றது,இந்த பதிப்பில் நன் உபுண்டு 10 .4 னை பற்றி பார்கபோகின்றோம் இது சமிபத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிப்பு இது மிகவும் பயன்னாளர்களை ஈர்க்கும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இதில் புதிய application களை எளிதில் நிறுவு வண்ணம் software center என்னும் புதிய package னை சேர்த்துள்ளனர் இதில் அனைத்து package install மற்றும் remove செய்யும் விதமாக உள்ளது அதன் படம் பின்வருமாறு.
  • புதிய வசதி என்று சொல்ல போனால் ibus இது இந்திய மொழியை னை அனைத்தையும் keyboard வழியாக Type செய்யலாம்.
  • compiz வசதியை 9 .04 மற்றும் 9 .10 இல் முழுமையாக தரப்படவில்லை ஆனால் இதில் அற்புதமாகவும் மடிகணினியில் வேலை செய்கின்ற வண்ணம் உள்ளது மேலும் மடிகணினி ஒரு பெரிய பிரச்சனையாக display இருந்தது அது இதில் சரிசெய்யப் பட்டுள்ளது.
  • மாணவர்களுக்கு பயனுள்ள ஒரு புதிய Game சேர்க்கப் பட்டுள்ளது, gbrainy இந்த கேம் மாணவர்களின் நினைவாற்றலை மற்றும் வேலைவைப்பை தேடும் மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ள விளையாட்டு .
  • இணைய தளவசதியை மொபைல் முலம் பயன்படும் நண்பர்களுக்கு இந்த 10 .4 மிகவும் அருமை,sony ericsson மொபைல் பயன்படுத்தும் நண்பர்கள் உபுண்டு 9 .04 ,9 .10 ,10 .4 இல் இணைய தளத்தை மிக வேகமாக பயன்படுத்த முடியும். இதில் புதிதாக aircel மற்றும் Docomo க்கான Access point setting update செய்யப் பட்டுள்ளது.புதிதாக wallpaper மற்றும் screen saver சேர்கப்பட்டுள்ளது.gcc மற்றும் python package கல் அனைத்தும் update செய்யப்பட்டுள்ளது.
  • புதிய theme களும் icon களும் sound ம் சேர்க்க,இதில் உள்ள sound நாம் update செய்யும் விதமாக package கள் தரப்பட்டுள்ளது.
  • விரைவில் கணினி பூட் ஆகும் விதமாக இதில் புதிய package சேர்கப்பட்டுள்ளது மேலும் oracle நிறுவனம் sun corparation நை வாங்கிய பிறகு openoffice இல் தனது பெயரை பதித்து வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு:-
இந்த பதிப்பை குறித்த பின்னூட்டம் (comments ) வரவேற்க படுகின்றது நீங்கள் தரும் ஒவ்வொரு பின்னூட்டமும் வலைப்பூவை மேன்படுத்த உதவும் நன்றி!

Wednesday, June 16, 2010

உபுண்டு இல் sound கேட்கவில்லையா?



நான் எனது மடிகணினியில் சவுண்ட் கார்டு இருந்தும் mp3 streaming package இருந்தும் என்னால் சவுண்ட் னை கேட்க முடியவில்லை? என்று நான் மிகவும் வருத்தப்பட்டேன்.நான் மடிகணினியை தேர்ந்தெடுத்தது தவறு என்று நான் மிகவும் வேதனை பட்டேன் அப்பொழுது ஒரு யோசனை!. என்னில் ஏற்பட்டது முதலில் எனது கணினின் சிப்செட் னை Lspci என்ற command னை கொண்டு சோதித்தேன், எனது மடிகணினி புதியதாக இருந்ததால் எந்த ஒரு லினக்ஸ் பதிப்பும் சவுண்ட் கார்டு இருந்தும் அதற்கான டிரைவர் னை கொண்டிருக்க வில்லை google லை நாடினேன் அது என்னை ஒரு புது உலகமான fourms க்கு கொண்டு சென்றது,அதில் ஒவ்வொருவரும் தங்களின் குறையை கொட்டி தீர்த்திருந்தனர் நானும் எனது குறையை சொன்னேன் அதற்கான விடையமும் கிடைத்தது அதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நான் ஆவலாக இருக்கின்றேன்.
தங்களின் கணினி அல்லது மடிகணினி புதிய சிப்செட் ஆக இருந்தால் அதற்கான டிரைவர் தற்பொழுது உள்ள எந்தவொரு லினக்ஸ் பதிப்பிலும் update செய்யவில்லை அதனால் தான் sound கார்டு இருந்தும் எந்தவொரு ஒலியும் கேட்பதில்லை எனக்கு ஏற்பட்ட கவலை தங்களுக்கு ஏற்பட வேண்டாம் நான் கூறும் ஒவ்வொரு செய்முறையும் தெளிவாக செய்யவும்.
முதலில் தங்களின் சிப்செட் மற்றும் கணினியில் உள்ள அனைத்து pci bus சோதிக்க வேண்டும் அதற்கான command பின்வருமாறு
  • Lspci
இதனை டெர்மினல் type செய்தவுடன் தங்கள் கணினியில் உள்ள அனைத்து interface கார்டு களை வருசைப்படுத்தி திரையில் காட்டும் அது பின்வருமாறு.
லினக்ஸ் பதிப்பில் சவுண்ட் கார்டு driver package alsa இது அனைத்து sound card க்கான டிரைவர் னை கொண்டிருக்கும் இன்றைய லினக்ஸ் பதிப்பு alsa mixer 1 .0 .19 மட்டுமே கொண்டிருக்கும் இது இன்டெல் மற்றும் மற்ற நிறுவனத்தின் ஆறு மாததிற்கு முன்பு வெளியான கணினிக்கு தேவையான அனைத்து டிரைவர் மட்டுமே கொண்டுடிருகின்றது அதனால் தற்பொழுது வெளியான சிப்செட் க்கு தேவையான் டிரைவர் இருப்பதில்லை,ஆகவே alsa mixer 1 .0 .23 க்கு நமது கணினியை update செய்தாலே போதும். இதை அப்டேட் செய்ய பின்வரும் ஸ்கிரிப்ட் உதவுகின்றது.

இந்த ஸ்கிரிப்ட் னை டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்

குறிப்பு :-
இந்த ஸ்கிரிப்ட் டவுன்லோட் செய்ய ubuntufourms இல் லாகின் ஆக வேண்டும்.

டவுன்லோட்
செய்து home directory இல் வைக்கவும் பின்னர்
  • tar xvf AlsaUpgrade-1.0.23-2.tar
மேலே உள்ள command னை டெர்மினல் இல் type செய்யவும் பின்னர்
  • sudo ./AlsaUpgrade-1.0.23-2.sh -d

மேலே உள்ள command line னை டெர்மினல் இல் type செய்யவும் பின்னர் இந்த script Alsa mixer 1 .0 .23 -2 டவுன்லோட் செய்யும்

குறிப்பு:-

இந்த script ரன் செய்ய அவசியம் இணைய வசதி தேவை
பின்னர் இந்த Alsa mixer 1 .0 .23 இன்ஸ்டால் செய்ய வேண்டும் அதற்கு பின்வரும் command line உதவுகின்றது.
  • sudo ./AlsaUpgrade-1.0.23-2.sh -c
  • sudo ./AlsaUpgrade-1.0.23-2.sh -i
இவை அனைத்தும் முடிந்த பிறகு கணினியை ஒரு முறை reboot செய்யவும் command line இல் reboot செய்ய
  • sudo shutdown -r 0
reboot செய்த பின்னர் தங்களின் சவுண்ட் கார்டு check னை செய்ய பின்வரும் command னை type செய்யவும்.
  • aplay -l
  • speaker-test -Dplughw:X,0 -c2


குறிப்பு :-
நீங்கள் இந்த செய்முறையை செய்த பின்னர் தங்களின் கருத்துகளை comments இல் தெரிவிக்கவும் நன்றி!


Monday, June 14, 2010

உபுண்டு 10 .4 ultimate edition ஒரு பார்வை ....




என்னை பிரமிக்க வைத்த ஒரு லினக்ஸ் பதிப்பு என்றால் அது இந்த உபுண்டு 10 .4 ultimate edition தான்,நான் எனது பல்கலைகழக விடுமுறையின் காரணமாக எனது நண்பன் கதிர்வேலை சந்திக்க சென்றேன் அவன் linux for you என்ற மாத இதழை பெறுவதற்கு சந்தா மூலம் பதிவு செய்திருந்தான் அதில் உபுண்டு 10 .4 ultimate edition தரபட்டுடிருந்தது,நண்பன் அதை எனது புதிய sony vaio vpcea12en இடும்மாறு கூறினான்,நானும் எனது நண்பனும் எனது மடி கணினியில் இட்டோம் அது ஒரு live cd யாக வேலை செய்தது அதன் splash screen நோ என்னை முதலில் என்னையும் எனது நண்பன் கதிவேலையும் மிகவும் பிரமிக்க வைத்தது எனது நண்பன் கூறினான் என்னடா "சந்துரு இப்படியும் உபுண்டில் உள்ளதா? என்று ஒரு ஆச்சரியத்துடன்" கூறினான்.நானும் எனது நண்பனும் ஒவ்வொரு application னையும் சோதித்தோம் அடடா அற்புதம் இதுவரை இல்லாத உபுண்டு பதிப்பில் இதில் உள்ளதை கண்டு மிகவும் பிரமித்து போனோம்.webcam மிகவும் அற்புதமாக வேலை செய்கின்றது,emulator ,k3d ,anjutha ,k3b ,மற்றும் மாணவர்களுக்கு தேவையான programming package அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளது.இந்த லினக்ஸ் பதிப்பில் என்ன இல்லை என்று நாம் விரல் விட்டு என்ன முடியாத அளவுக்கு நிறைய package மற்றும் application உள்ளன.இது முழுவதும் கிராபிக்ஸ் சப்போர்ட் மற்றும் wine போன்ற பிரபல application களும் அடங்கியுள்ளது மேலும் dispaly control ,compiz நன்றாக உள்ளது . இதில் எளிதில் packgage களை அப்டேட் செய்யும் வசதிகள் அனைத்தும் தரப்பட்டுள்ளது இந்த deskop environment லினக்சினை வெறுபவர்களுக்கு இது ஒரு புதுமையானதாக இருக்கும்.ஒரு குறை என்னவென்றால் எனது கணினி புதிய சிப்செட் ஆக இருப்பதால் சவுண்ட் மட்டும் ஒரு சின்ன பிரச்சனையாக உள்ளது மற்றப்படி அனைத்தும் சூப்பர்.......உபுண்டு ultimate edition படம் பின்வருமாறு....

Thursday, June 10, 2010

python program ஒரு பார்வை...


python என்றவுடன் நமக்கு நினைவில் தோன்றுவது மலைபாண்புதான்,பாண்புக்கு எவ்வளவு விசத்தன்மை இருக்கின்றதோ அதுபோலவே இந்த python programming மொழிக்கும் அவ்வளவு வரவேற்பு.

  • இந்த python பற்றி ஏன் நான் இங்கு கூறவேண்டும் என்று பலர் நினைக்கலாம் இன்றைய காலகட்டத்தில் python இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.பல பல மொழிகள் தினம்தோறும் வந்தாலும் இந்த python க்கு உள்ள மௌசு இன்னும் குறையவில்லை.

  • python என்பது high level programming language இதனை 1989 ஆம் ஆண்டு நெதர்லாந்த் நாட்டை சேர்ந்த Guido van Rossum என்பவரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு opensource language

  • இது Game ,website ,animation ,webserver ,....etc போன்றவற்றிலும் மற்றும் பல இடங்களில் பயன்படுத்தபடுகின்றது நாம் அறிந்த google ,yahoo ,msn ,ask போன்ற பிரபல search engine களில் இந்த python தான் முதுகெலும்பாக செயல்படுகின்றது.maya ,blender ,gimp ,scribus போன்ற பிரபல animation மற்றும் போட்டோ application களில் இந்த python பயன்படுகின்றது.

  • லினக்சில் இதன் பயன்பாடு என்ன என்று ஒரு கேள்வி எழலாம் Redhat installation இன் பொழுது ankonda loading என்ற தகவல் திரையில் தோன்றும் இது ஒரு python programe னால் உருவாக்கிய loading programe ஆகும்.

  • இந்த python programe இல் statement மற்றும் controlflow அனைத்தும் c language னை போன்றுதான் மிக எளிதாக கற்றுகொள்ளலாம் இதில் புதியது என்று சொலும் அளவுக்கு ஒன்றும் இல்லை இதில் function க்கு பதிலாக method னை பயன்படுத்துகின்றனர்.இது windows ,macos ,linux இயங்கு தளத்திலும் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

  • இதில் நூற்றுக்கும் மேலாக library களும் c ,c ++ ,ஜாவா,போன்ற மொழிகளை இந்த python programe உடன் இணைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக பட்டுள்ளது . python மொழியை கற்றுகொண்டால் வேலைவாய்ப்பை எளிதில் பெறமுடியும்.இன்றைய python பதிப்புகள் பின்வருமாறு.
  • python 2 .6 .5
மேலும் இதனை download மற்றும் தெரிந்துக்கொள்ள விரும்பினால் பின்வரும் link னை கிளிக் செய்யவும்.

லினக்சின் 8 விதமான Desktop Manager .....

எதுவும் இல்லை லினக்சில் என்று யாரும் கூற முடியாத அளவுக்கு லினக்ஸ் தலைநிமிர்ந்து நிற்கின்றது லினக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் தங்களின் தேவையை பொருத்து Desktop னை கூட தேர்தெடுக்க முடியும்.

லினச்கில் எத்தனை விதமான Desktop இருக்கிறது என கேட்டால் நாம் எல்லோருமே KDE மற்றும் GNOME என்று கண் சிமிட்டும் நேரத்தில் கூறிவிடுவோம்,KDE மற்றும் GNOME இரண்டுமே அதிகமான memory மற்றும் process speed இருந்தால் மட்டுமே நல்ல ஒரு Desktop effect னை தரும் .

GNOME மற்றும் KDE Desktop னை குறைந்த Hardware configuration கொண்ட கணினியில் பயன்படுத்த முடியாது,இதற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா என பார்க்கும் போது பின்வரும் மிக அற்புதமான Desktop மேனேஜர் அந்த குறையை நிவர்த்தி செய்கின்றது. இவை அனைத்துமே குறைந்த நினைவகம் மற்றும் எந்தவித Hardware லும் இயங்கும் தன்மை கொண்டது.
இது Unix சார்ந்த Desktop மேனேஜர் மிகவும் குறைந்த memory space னை பயன்படுத்தும் மேலும் இதன் வேகமோ மிக அதிகம்.
இது graphic effect களை கொண்ட Application மற்றும் website களின் graphic னை நீக்குகின்றது மேலும் குறைந்த memory னை எடுத்துகொள்ளும்.
இது பனிக்கட்டியை போல தோற்றம் கொண்டது மிகவும் அருமையான Desktop மேனேஜர் அதிவிரைவானது .
தை பார்பதற்கு விண்டோஸ் 98 போன்று இருக்கும் அணைத்து file களும் home directory இல் text file ஆகா சேமிக்கப்படும்.
இது குறைவான Desktop graphic effect னை support செய்யும்.
இது வெறும் நான்கு icon மட்டுமே கொண்டு இருக்கும் இதனை mouse னை கொண்டே இயக்க முடியும்
இது குறைந்த அளவு gnome மற்றும் kde support செய்யும் விதமாக வடிவமைக்கபட்டுள்ளது.
இது மிகவும் அற்புதமான Desktop மேனேஜர்,இதன் செயல்பாடு மிக அதிகம் மேலும் குறைந்த அளவு memory னை எடுத்துக்கொள்ளும்


குறிப்பு
:-

இந்த Desktop manager பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள Desktop manager இன் பெயரினை சொடுக்கவும்


எப்படி லினக்சில் புதிய Application நிறுவுவது.......

விண்டோஸ் பயன்பாட்டாளர்கள் லினக்சை வெறுக காரணம் என்னவென்று ஒரு புதிய கருத்துகணிப்பை எங்கள் பல்கலைகழகத்தில் எடுத்தேன் அதில் ஒரு விடையம் கிடைத்தது,அது என்வென்று தெரிந்துகொள்ள நீங்களும் ஆர்வமமாக இருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன் அது ஒன்றும் இல்லை விண்டோசில் புது Application களை எளிதாக நிறுவிவிடலாம் ஆனால் லினக்சில் அப்படி நிர்வுவ முடியாது என்பதே. இந்த பதிலைத்தான் பல விண்டோஸ் பயன்பாட்டாளர்கள் கூறினர் அதை கருத்தில் கொண்டு லினக்சில் புதிய Application நிறுவும் முறையை ஒரு இடுக்கில் எழுதிவிடலாம் என நினைதேன் ஆனால் அதற்குள் எனது பல்கலைகழக தேர்வு வந்துவிட்டது.

லினக்ஸ் பதிப்பின் முதன்மை நிறுவனமான Redhat மற்றும் Debian னை சார்ந்து வெளியிடப்படும் பதிப்புகளை எளிதாக நிறுவி விடலாம். இந்த நிறுவனம் தங்களால் வெளியிடும் பதிப்புகளுக்கு தேவையான Application மற்றும் Tool களை .deb மற்றும் .rpm என்ற முறையில் வெளியிடும்,இதனை அந்த அந்த பதிப்புக்கு தகுந்தவாறு தரவிறக்கம் செய்து இரண்டு முறை கிளிக் செய்தாலே போதும். லினக்ஸ் Application நை இரண்டு முறையை பயன்படுத்தி நிறுவ முடியும்

  • Command-line process

  1. Compiling and Installing software from source

  2. Installing RPM's using the Redhat Package Manager

  3. Installing using Debian's apt-get

  4. Installing mandrake things

  5. Installing with fedora / yum

  6. Installing slackware packages

  7. Installing software using Gentoo EMerge

  8. Installing binary files (.BIN/.SH)

  9. Installing .package Files (AutoPackage)

  • Graphical (GUI) process

  1. Using Synaptic (Fedora, Ubuntu)

  2. Using YaST2 (SuSE, openSuSE)



மேல் சொன்ன முறையை பயன்படுத்தி நிறுவமுடியும் சரி ஒவ்வொரு நிறுவும் முறையை காண்போம்.

Compiling and Installing software from source

இது ஒரு command line இன்ஸ்டால் செய்யும் முறையாகும் இதில் Application மற்றும் Tool களை நாமாகவே Source file லை compile செய்து இன்ஸ்டால்செய்யலாம் .Soruce file பின்வரும் Format இல் இருக்கும்".tar.gz", ".tar.bz2", or ".zip" Soruce file அதாவது நீங்கள் இன்ஸ்டால் செய்யபோகும் Application மற்றும் Tool களின் source னை சரியான
தலத்தில் இருந்து தரவிறக்கம் செய்து home directory இல் வைக்கவும்.பின்வரும் code னை terminal type செய்யவும்

mkdir /home/username/src/

username என்ற இடத்தில் தங்களின் லாகின் அக்கௌன்ட் பெயரையும் src என்பதற்கு தங்களின் package name னை கொடுக்கவும்

cd /home/username/src/

source file னை unzip செய்யவேண்டும்

tar -zxvf 

file னை extract செய்த பின்னர்

more INSTALL
./configure
make

Application னை இன்ஸ்டால் செய்ய su login ஆகவேண்டும்


su
make install

Installing RPM's using the Redhat Package Manager

இந்த முறையில் பின்வருமாறு டெர்மினல் இல் type செய்ய வேண்டும்,file name என்ற இடத்தில் தங்களின் package or file name type செய்யவும்

rpm -i 
rpm -e 


Installing software with Apt-get

இந்த முறை டெபியன் சார்ந்த பதிப்பில்,பின்வருமாறு terminal இல் type செய்து
sudo gedit /etc /apt /sources .list

இந்த code னை paste செய்த பின்னர் save செய்யவும்

#Local Mirror  deb ftp://ftp.us.debian.org/debian/ stable main contrib non-free  deb-src ftp://ftp.us.debian.org/debian/ stable main contrib non-free  #Security Updates  deb ftp://ftp.us.debian.org/debian-security/ stable/updates main contrib non-free  deb-src ftp://ftp.us.debian.org/debian-security/ stable/updates main contrib non-ப்ரீ


save
செய்த பின்னர் பின்வரும்மாறு டெர்மினல் இல் type செய்யவும்

sudo apt -get update

Installing software on Mandrake with urpm


இந்த முறை mandrake இல் பயன்படுத்தப்படுகின்றது டெர்மினல் இல் பின்வருமாறு type செய்யவும்

[root@cayanne ~/]#urpmi kdemoreartwork

[root@cayanne ~/]#urpmi libdvdcss 

இந்த code media வை add செய்ய உதவுகின்றது

[root@cayanne ~/]#urpmi.addmedia contrib ftp://ftp.sunet.se/pub/Linux/distributions/mandrake/updates/8.2/RPMS with ../base/hdlist.cz added medium contrib retrieving description file of "contrib"... ...retrieving done retrieving source hdlist (or synthesis) of "contrib"... ...retrieving done examining whole urpmi database

Installing with fedora / yum

இந்த முறை பெடோர வில் பயன்படுத்த படுகின்றது ,பின்வரும் code னை டெர்மினல் இல் type செய்யவும்

  • yum install
  • yum remove
  • yum update

இன்ஸ்டால் செய்ய மற்றும் remove செய்ய மேலே உள்ள command உதவுகின்றது

Installing slackware packages

இந்த முறை slackware இல் பயன்படுத்தப்படுகின்றது,பின்வருமாறு டெர்மினல் இல் type செய்யவும்

installpkg

இன்ஸ்டால் செய்ய root account இல் லாகின் ஆகவேண்டும்.slackware rpm package னை support செய்யும்.இன்ஸ்டால் செய்ய பின்வருமாறு

type செய்யவும்


rpm2tgz .rpm

Installing Binary Files and Scripts (.BIN/.SH)


இந்த முறை எல்லா லினக்ஸ் பதிப்புக்கும் பொதுவானது,டெர்மினல் இல் பின்வருமாறு type செய்யவும்
முதலில் bin file execute ஆகும் விதமாக mode னை மாற்றவேண்டும்

chmod +x NameOfYourFile.bin


பின்னர் பின்வருமாறு type செய்யவும்

./NameOfYourFile.bin

sh file னை ரன் செய்ய பின்வருமாறு type செய்யவும்

sh NameOfYourFile.sh


Installing .package Files

.package format இல் இருக்கும் source file னை இன்ஸ்டால் செய்ய பின்வருமாறு டெர்மினல் இல் type செய்யவேண்டும்

sh nameOfYourPackage.packag

  • ubuntu மற்றும் fedora லினக்ஸ் பதிப்புகள் Synaptic package என்ற tool னை கொண்டு புதிய Application களை இன்ஸ்டால் செய்கின்றது
  • உபுண்டு வில் இதனை தேர்ந்தெடுக்கும் முறை

Goto =) System =) Administration =) Synaptic package manager
அதில் உள்ள packge களில் தங்களுக்கு தேவையானதை mark செய்து இன்ஸ்டால் செய்ய முடியும்

குறிப்பு:-
இந்த பதிப்பு தங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன் மேலும் தகவலுக்கு எனது மினஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும் நன்றி!