Pages

Monday, July 26, 2010

லினக்சில் எவ்வாறு mp3 பாடலை வெட்டுவது?


புதிய புதிய திரைப்படங்கள் மாதம் ஒன்று வெளிவந்த வண்ணம் உள்ளது படத்தின் பாடல் நமக்கு பிடித்திருந்தால் அந்த பாடலை நம்முடைய mobile ringtone ஆக வைக்க விரும்புவோம் இந்த ringtone னை பெற நாம் மொபைல் downloading cafe னை நாடுவோம் அவர்கள் இது தான் ஒரு வாய்ப்பு என்று தங்கள் மனதில் எவ்வளவு விலை தோன்றுகின்றதோ அதை நம்மிடம் வாங்கிவிடுவார்கள்.
நமக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அதை ஏன் மற்றவர்களிடம் பணம் செலுத்தி பெறவேண்டும். இந்த இடுகையில் எப்படி பாடல்களை வெட்டுவது என்பதை பாப்போம். பாடல்களை மிகவும் எளிதாக வெட்டமுடியும் இந்த mp3split tool னை கொண்டு. இது ஒரு ஓபன் source tool இவை இரண்டு பதிப்புகளிலும் லினக்ஸ் மற்றும் விண்டோஸ் கிடைக்கின்றது இதை பயன்படுத்துவதும் செயல்படுத்துவதும் மிகவும் எளிது.

இதில் எவ்வளவு பெரிய file ஆக இருந்தாலும் வெட்ட முடியும் வார்த்தைகள் மற்றும் வரிகள் போன்ற வற்றை தங்களின் ரசனைக்கு ஏற்ப வெட்ட முடியும் மிக சிறந்த உதாரணம் வடிவேல் மற்றும் விவேக் காமெடி வார்த்தைகள் இவ்வாறே ringtone ஆக உருவாக்க படுகின்றது .

இந்த mp3splt னை இந்த http://mp3splt.sourceforge.net/ சென்று தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் இன்ஸ்டால் செய்த பின்னர் உபுண்டு வில் sound and video வில் தெரிந்தெடுக்க பின்னர் இவ்வாறு ஒரு திரை தோன்றும்.


தங்களுடைய விருப்பமான பாடலின் file location ல் தெரிந்தெடுக்க வேண்டும் பிறகு எந்த வரியை வெட்ட வேண்டுமோ அதை play செய்து அதன் duration னை குறிக்க வேண்டும்.


தங்களுடைய பாடல் வெட்டிய பிறகு தாங்கள் தரும் location இல் வெட்டிய file save ஆகும்.

6 comments:

  1. உபதகவல்... உபுண்டு உபயோகிப்பவர்கள், ubuntu software centerலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளலாம்... :-)
    நன்றி நண்பா...:-)

    ReplyDelete
  2. உபுண்டு மற்றும் லினக்ஸ் மிண்ட் ரெஸ்போசிட்டரியில் இவை கிடைப்பதால், நேராக டெர்மினலில் இருந்தோ, சினாப்டிக்கிலிருந்தோ, சேதுபதி சொன்னதைப் போல buntu software centerலிருந்தோ நிறுவிக்கொள்ளலாம்.

    என்னைப் பொறுத்தவரை நான் பயன்படுத்துவது அடாசிட்டி, எடிட் ச்ய்வதோடு நமக்குத் தேவையான எஃபெக்டுகளைத் தர அடாசிட்டிதான் சிறந்தது.

    ReplyDelete
  3. தமிழினியன் மற்றும் சேதுபதி இருவருக்கும் என்னுடைய நன்றிகளை முதலில் தெரிவித்துகொள்கின்றேன் எனக்கு ஓய்வு
    அதிகம் தேவை என்னுடைய உடல் நிலை முழுமையாக குணம் அடைந்த பிறகு தங்களின் கருத்துகளுக்கு மறுமொழி தருகின்றேன் தமிழினியன் நண்பா தங்களின் மின்னஞ்சல் முகவரியை தந்தாள் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  4. @சந்திரசேகரன் supathamizhiniyan[at]gmail[dot]com

    ReplyDelete
  5. ஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.
    நன்றி
    தமிழி நிர்வாகம் , கனடா

    ReplyDelete
  6. Ubuntu 10.04 -க்கு இவங்க வெப் சைட்டுல தரவிறக்கம் பண்ண லிங்க் இல்லையே?

    ReplyDelete