Pages

Friday, July 16, 2010

லினக்ஸ் கணினியில் உள்ள hardware களை பற்றி தெரிந்துகொள்ள.

மறுமொழி:-

இன்றைய காலத்தில் புதிய புதிய harware device கள் சந்தையில் வந்தவண்ணம் உள்ளது நாம் புதிய கணினி வாங்கினால் அதில் எந்த கம்பெனி hardware device கள் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள நமக்கு ஆர்வமாக இருக்கும் இந்த ஆர்வம் எனக்கு மட்டும் இல்லை கணினி வைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இருக்கும்.விண்டோஸ் இயங்குதளத்தில் இதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும் என்று சிலர் நினைக்கலாம் லினக்ஸ் இல் command னை கொண்டு தான் பார்க்க முடியம் என்று நினைக்கலாம் அது முற்றிலும் தவறான எண்ணம் .command னை கொண்டு harware device களை பார்ப்பது என்பது அந்த காலம் தற்பொழுது அனைத்தும் GUI interface மூலம் பார்க்கும் விதமாக நிறைய tools கள் opensource developer கள் தந்துள்ளனர்.

பயன்:-

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய மான விஷயம் என்ன வென்றால் motherboard இது நல்ல தரமான கம்பெனி இல் தயாரிக்க பட்டதா என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும்,இதை நாம் தெரிந்து கொள்ளும் வரை நமக்கு ஒரு நிம்மதி கிடைக்காது.நான் புதிய கணினி வாங்கிவிட்டேன் என்று நண்பர்களிடம் கூறினால் போதும் motherboard எந்த கம்பெனி என்று கேட்பார்கள் அடுத்து RAM size எவ்வளவு என்று கேட்பார்கள் இது போன்ற அடிப்படை hardware device களின் தகவலை நான் தெரிந்து கொள்வது அவசியம்,இதை நாம் எப்படி தெரிந்து கொள்ளவது?இதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும் sysinfo tool னை கொண்டு, இது மிகவும் அதி அற்புதமான tool இது கணினியில் உள்ள அனைத்து hardware device களை நமக்கு தெரிவிக்கும்.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய மற்றும் இதனை பற்றி தெரிந்துகொள்ள இங்கு click செய்யவும்
இதனை அந்த அந்த லினக்ஸ் பதிப்புக்கு தகுந்த மாதிரி package னை download செய்யவும்.

செயல் விளக்கம்:-

இது உபுண்டு கணினியில், டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர்

Application --->system tools

பின்னர் sysinfo னை தெரிவுசெய்யவும் இதை போல ஒரு திரை ஓபன் ஆகும் .


  • இந்த திரை எந்த லினக்ஸ் இயங்குதளம் இன்ஸ்டால் செய்துள்ளோம் என்ற செய்தியை திரையில் காண்பிக்கும்.

  • இந்த திரை process இன் speed மற்றும் அதன் மாடல் போன்றவற்றை திரையில் காண்பிக்கும்.



  • இந்த திரை மொத்த memory மற்றும் அதன் கொள்ளவு போன்றவற்றை திரையில் காண்பிக்கும்.


  • இந்த திரை motherboard இல் உள்ள அனைத்து bus மற்றும் இதர தகவலை திரையில் காண்பிக்கும்.



குறிப்பு:-
இந்த தகவல் தங்களுக்கு போதுமானதாக இருகின்றதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை

1 comment:

  1. Which one is the details of the Motherboard? How to get the Drivers' Software [LAN, GRAPHICAL ACCELERATOR, SOUND] from the Internet once the Mother board is known? [The mother board CD is Lost.]

    ReplyDelete