Pages

Monday, July 5, 2010

உங்கள் லினக்ஸ் கணினியின் வெப்ப நிலையை பற்றிய செய்தியை காண ஆவலா?


நோக்கம்:-

என்னுடைய கணினியின் வெப்ப நிலையை காண வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாலா ஒரு ஆசை மனிதனின் உடலில் உள்ள வெப்ப நிலையை காண நிறைய கருவிகள் இருக்கின்றது கணினியின் வெப்ப நிலையை காண ஏதேனும் tool கள் இருகின்றதா என்ற ஒரு ஆராச்சியில் நான் இறங்கினேன் நிறைய இணையதளங்களை தேடிபார்த்தேன்,ஒரு நல்ல தகவல் ஒன்று கிடைத்தது அது ஒன்றும் இல்லை acpi tool தான் இது ஒரு கணினிக்கு ஒரு மருத்துவர் என்றும் கூறலாம்.

பயன்கள் :-

இது மடிகணினி பயன்னாலாருக்கு மிகவும் உகந்த ஒரு tool . இதன் பயன்பாடு என்ன? இது கணினியின் வெப்ப நிலை மற்றும் மடிகனினியின் Battery இன் கொள்ளவு மற்றும் நிலைகளை தெரிவிக்கும்.இது எந்த ஒரு லினக்ஸ் பதிப்பிலும் தரப்படவில்லை நீங்கலாக தான் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.நீங்கள் உபுண்டு லினக்ஸ் பயன்னாலராக இருந்தால் டெர்மினல் இல் sudo apt -get install acpi என type செய்ய வேண்டும்.இந்த tool னை தவிர நிறைய tool கள் உள்ளது வெப்ப நிலையை காண

இன்ஸ்டால் செய்யும் வழிமுறை:-

இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்யும் வழிமுறை விளக்கமாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

செய்முறை விளக்கம்:-



இன்ஸ்டால் செய்த பின்னர் டெர்மினல் இல் acpi -V என type செய்க அது பின்வரும் தகவல் அடங்கிய செய்தியை டெர்மினல் இல் தெரிவிக்கும்

Battery 0: Full, 100%
Battery 0: design capacity 7800 mAh, last full capacity 4988 mAh = 63%
Adapter 0: on-line
Thermal 0: ok, 63.5 degrees C
Thermal 0: trip point 0 switches to mode critical at temperature 126.0 degrees C
Cooling 0: Processor 0 of 10
Cooling 1: Processor 0 of 10


என்னுடையது மடிகணினி என்பதால் Battery என்ற செய்தியை தெரிவிக்கின்றது,நீங்கள் Desktop கணினியை பயன்படுத்தினால் Battery என்ற செய்தியை தெரிவிக்காது.

குறிப்பு :-

தங்களுக்கு தெரிந்த டூல்களை தெரிவிக்கலாம் நன்றி!!!!

No comments:

Post a Comment