Pages

Thursday, July 29, 2010

லினக்ஸ் kernel என்றால் என்ன?



மனிதனுக்கு மிகவும் தேவையானது இதயம் இவை இல்லாத ஒரு உடல் இல்லவே இல்லை. இதயம் மனிதனின் மிக முக்கிய உறுப்பு அது போல தான் kernel லும், லினக்ஸ் ஆக இருந்தாலும் சரி விண்டோஸ் ஆக இருந்தாலும் சரி அனைத்து வேலைகளை ஒழுங்கு படுத்துவது இதுவே அதனால் தான் இதனை operating system களின் இதயம் என்று கூறபடுக்கின்றது. சரி ஏன் லினக்ஸ் kernel ளை இந்த இடுகையில் சொல்ல வேண்டும் என்று சிலர் நினைக்கலாம் kernel ளை பற்றி பலபேருக்கு தெரியாமல் இருக்கும் அதை கருத்தில் கொண்டே இதை ஒரு இடுகையாக எழுத வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பே இருந்தே ஒரு எண்ணம்.
ஒரு நாள் எனது நண்பன் ஒருவரிடம் kernel என்றால் என்ன என்று ஒரு கேள்வியை கேட்டேன் அதற்கு அவர் கூறிய பதில் தெரியவில்லை என்பதே? கடைசிக்கு அவர் முதுகலை பட்டம் பெற்றவர் இவ்வாறு kernel பாற்றிய ஒரு செய்தியும் தெரியாமல் இருக்க நாம் linux kernel என்று ஆயிரம் முறை கூறினாலும் எவருக்கும் தெரியாது அதை கருத்தில் கொண்டே இந்த kernel பற்றியும் அதன் நன்மையையும் எழுதுகின்றேன் .

kernel -ன் பயன்:-

முதலில் தங்களுடைய கணினியை on செய்தவுடன் RAM ல் load ஆவது kernel தான் இதன் வேலை என்னவென்றால் தங்களுடைய கணினியில் உள்ள அனைத்து harware driver களை load செய்வது,power management ,process management ,network management இன்னும் பல வேலைகளை இந்த kernel தான் செய்கின்றது.
mobile ஆக இருக்கட்டும் கணினியாக இருக்கட்டும் இந்த kernel லே main core ஆக உள்ளது kernel இல்லாது எந்த ஒரு இயங்குதளமும் இது வரை இல்லை. mac இயங்குதளம் மற்றும் open சொலாரிஸ் இவை இரண்டும் லினக்ஸ் kernel இல் இயங்குகின்றது. லினக்ஸ் கேர்நெல் இல் என்ன அப்படி இருக்கு என்று நம்மில் சிலருக்கு வினா எழும் லினக்ஸ் kernel மிகவும் compress செய்யப்பட்டு இருக்கும், அதனால் எந்த ஒரு வைரஸ் program கள் இந்த kernel னை access செய்ய முடியாது ஆவே லினக்ஸ் இல் வைரஸ் தொல்லை இல்லை இதில் security மிகவும் அதிகம்.
kernel developer கள் kernel க்கு ஒன்றுக்கு அதிகமான algorithm பயன்ப்படுத்துவார்கள் இதனால் kernel னை பிரிப்பது கடினம்.

kernel version :-

ஒவ்வொரு
kernel புதிய பதிப்புகள் வெளிவர ஆறு மதங்கள் ஆகும். ஆகவே தான் புதிய லினக்ஸ் kernel ல் புதிய harware device கள் செயல்படும் ஆறு மாதங்களில் வெளியான harware device களின் driver கள் புதிய kernel ல் சேர்க்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு புதிய லினக்ஸ் kernel பதிப்பில் பழைய பதிப்பில் உள்ள தீமைகளை நீக்கப்பட்டு இருக்கும்.

3 comments:

  1. கலக்குற நண்பா.எழுத்து நடை சுவையாக உள்ளது.

    ReplyDelete
  2. இப்புட்டு நாளும் இருந்த டவுட்டு தீர்ந்தது நன்றி

    ReplyDelete
  3. இப்புட்டு நாளும் இருந்த டவுட்டு தீர்ந்தது நன்றி

    ReplyDelete