Pages

Sunday, July 4, 2010

Linux மற்றும் windows இல் எளிய முறையில் Typing கற்றுக்கொள்ள உதவும் Open source application

மறுமொழி :-

Typing என்பது மிக பெரிய கடினமான வேலை என்று நினைக்க வேண்டாம் மிகவும் எளிது நீங்கள் typing கற்றுகொடுக்கும் பயிலகங்களை நாடி செல்ல வேண்டாம் typing கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தாலே போதும் நீங்களும் திரையை பார்க்காமல் keyboard இல் type செய்யலாம்,சிலர் நினைக்கலாம் பயிலகங்களை நாடியே typing கற்றுக்கொள்ள முடியவில்லை இந்த Application உதவுமா என்று?என்னுடைய மறுமொழி என்னவென்றால் மிகவும் எளிது.

கதை :-

நான் புதிதாக polytechnic இல் சேரும்போது keyboard இல் ஒவ்வொரு எழுத்தாக தேடி தான் type செய்வேன் இது எனக்கும் வருத்தமாக இருந்தது என்னுடை ஆசிரியர் சதீஷ் என்பவர் keyboard னையும் திரையையும் பார்க்காமல் keyboard இல் type செய்வார் அப்பொழுது நான் நினைத்தேன் நாமும் இப்படி type செய்ய வேண்டும் என்று, நான் இதற்காக எந்தவொரு பயிலகங்களை நாடி செல்லவில்லை...""எதுவும் சில காலம் என்று நினைத்துகொண்டு நான் polytechnic படிப்பினை முடித்தேன் "அந்த சில காலம்" எனக்கு வந்தது, நான் புதிதாக ஒரு கணினியை வாங்கினேன் அதில் manderiva லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவி அதில் கல்வி சார்ந்த package கல் தேடி பார்த்தேன் அதில் நிறைய இருந்தது ktouch என்ற ஒரு பெயரில் ஒரு application என்னட இது புதிய பெயராக உள்ளதே என்று நினைத்துகொண்டு அதை ஓபன் செய்தேன் அப்பொழுதான் எனக்கு தெரிந்தது அது ஒரு Typing கற்றுக்கொள்ள உதவும் tool என்று. அதை நான் தினமும் ஒரு அரை மணி நேரம் பயன்படுதினேன் பிறகு என்ன ஆயிற்று எந்த ஒரு கணினியை பயன்படுத்தினாலும் சரி எனது விரல்கள் மிக வேகமாகவும் திரையை பார்க்காமலும் விரைவாக எந்த ஒரு வார்த்தைகளையும் type செய்துவிடும். தங்களின் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில் நான் கூறும் typing application னை பயன்படுத்தினால் போதும்.

Tool களின் பெயர்கள் :-
Application பயன்கள் :-

இந்த application கள் எப்படி keyboard இல் விரல்களை பயன்படுத்த வேண்டும்,எவ்வாறு Typing செய்ய வேண்டும் என்ற பல கருத்துகளை நமக்கு தெரிவிக்கும் முதலில் சிரமமாகத்தான் இருக்கும் பிறகு பாருங்கள் தங்களின் வேகத்தை.விண்டோஸ் லும் நிறைய Typing application இருக்கின்றது அது இப்படி இல்லை நிறைய நுணுக்கங்களை அதில் தரவில்லை,அவை அனைத்தும் பணம் செலுத்தி வாங்க வேண்டி உள்ளது இவை இலவசம் மிகவும் எளிதாக பயன்படுத்தலாம்.

இயங்குதள ஆதரவு :-

இந்த klavaro லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இல் இயங்கும் விதமாக உள்ளது ஆனால் KTouch அப்படி இல்லை லினக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே ஆதரிக்கும் .விண்டோஸ் பயன்னாளர்கள் klavaro னை download செய்ய இங்கே கிளிக் செய்யவும் .,இன்ஸ்டால் செய்யும் வழிமுறையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

செயல் விளக்கம் :-

இந்த விளக்க முறையை படமாக தந்துலேன் நான் klavaro னை பயன்படுத்தி உள்ளேன்,முதலில் klavaro டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் , அதனை ஓபன் செய்யவேண்டும் எல்லா லினக்ஸ் பதிப்பிலும் Education என்ற பகுதில் இது இன்ஸ்டால் ஆகி இருக்கும்.அதில் நிறைய நிலைகள் உள்ளது எப்படி விரல்களை பயன்படுத்தவேண்டும் மற்றும் எவ்வாறு இடைவெளி விட வேண்டும் என்ற பல நிலைகள் உள்ளது அதற்க்கான விளக்க படம் பின்வருமாறு

எப்படி தங்களின் விரல்களை பயன்படுத்த வேண்டும் என்ற விளக்க படம்


இது இரண்டாவது நிலை ஒவ்வரு வார்த்தைகளை எவ்வாறு இடைவெளி விட்டு தட்டச்சு செய்ய வேண்டும் என்ற விளக்க படம்

இது இறுதி நிலை தங்களின் தட்டச்சு வேகத்தை அறிந்து கொள்ள உதவும் அதன் விளக்க படம்


குறிப்பு :-

இந்த விளக்கம் போதவில்லை என்றால் டூல் களின் பெயரினை செடுக்கவும் நன்றி வணக்கம்!!!

4 comments:

  1. Klavaro is really awesome ..its interface is gorgeous.Very useful information,Thanks one again...

    ReplyDelete
  2. அசத்துகிறீர்கள். பயனுள்ள தகவல்களிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  3. PRAKASH.../tamilblok.../
    மிக்க நன்றி நண்பர்களே!!!

    ReplyDelete