Pages

Friday, July 30, 2010

open suse 11 .3 ஒரு பார்வை...


ஓபன் suse என்பது முன்னணி லினக்ஸ் பதிப்புகளில் ஒன்று இவை இந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது இதில் நிறைய மேன்படுத்தப்பட்ட tool மற்றும் நிறைய application கல் உள்ளது mandriva 2010 .1 பிறகு சந்தையில் வெளிவந்த லினக்ஸ் பதிப்பு என்பது குறிபிடத்தக்கது. இவை புதிய future களை உள்ளடக்கி cd மற்றும் dvd களில் தந்துள்ளனர் kde 4 .4 .4 மற்றும் மேன்படுத்தப்பட்ட Gnome 2 .30.1 போன்றவைகளை கொண்டு அசத்தி நம்மை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளனர் இவை 32 bit மற்றும் 62 bit இரண்டு architecture யும் support செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் kernel version 2 .6 .34 மற்றும் flash player னை இதில் default ஆக தரப்பட்டுள்ளதால் web video வை எளிதாக கண்டு மகிழலாம் மேலும் இதில் 1000 மேலாக புதிய package கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் என்ன சிறப்பு?

இதில் பின்வறும் பல சிறப்புகளை கொண்டுள்ளது இதில் புதிதாக Btrfs என்ற புதிய file system னை support செய்யும் விதமாக உள்ளது
  • Linux kernel 2.6.34
  • Support for Btrfs filesystem
  • KDE SC 4.4.4 desktop environment
  • GNOME 2.30.1 desktop environment
  • X.Org 7.5;
  • X.Org server 1.8.0
  • New artwork
  • Mozilla Firefox 3.6.6
  • OpenOffice.org 3.2.1.4
  • Adobe Flash Player 10.1.53.64
  • The GIMP 2.6.8
  • iPhone support
  • iPod Touch support
  • Netbook support
இதன் படம்:-

ஓபன் suse 11 .3 gnome live

ஓபன் suse 11 .3 kde live




இதனை download செய்ய வேண்டுமா?

இது dvd மற்றும் kde live ,gnome live cd யாகவும் கிடைக்கின்றது பின்வறும் link னை கிளிக் செய்து download செய்துக்கொள்க.
Download openSUSE 11.3 DVD
Download openSUSE 11.3 KDE4 Live CD
Download openSUSE 11.3 GNOME Live CD











Thursday, July 29, 2010

தெரிந்துக்கொள்வோமா Torrent னைப் பற்றி?


என்ன torrent நா? எனக்கும் சந்தேகம்மாகத்தான் இருந்தது தெரிந்துக்கொள்வதர்க்கு முன்பு torrent என்பது ஒருவகையான download tool இதனை கொண்டு எந்தவகையான மென்பொருள்களும்,வீடியோ,ஆடியோ,picture மற்றும் Application tool களையும் டவுன்லோட் செய்ய முடியும்.

rapidshare போன்ற பிரபல file sharing website க்கு செல்லாமல் நாம் எந்த ஒரு file களையும் இந்த torrent website களை கொண்டு டவுன்லோட் செய்ய முடியும் இதற்கு நீங்கள் wait செய்ய தேவையில்லை. media fire மற்றும் rapidshare போன்ற தளங்களில் premium account இருந்தால் மட்டுமே நாம் காத்திருக்க அவசியம் ஏற்படாது premium account இல்ல விட்டால் சில second கள் file னை டவுன்லோட் செய்ய காத்திருக்க வேண்டும் இந்த தொந்தரவு torrent இல் இல்லை.

torrent ல் நீங்கள் எந்தவித file களையும் download செய்து விடலாம் . முதலில் torrnent client னை தங்களுடைய கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் இந்த torrent client னை உபுண்டு லினக்சில் default ஆக தந்துள்ளனர் அதனால் இதனை நீங்கள் install செய்ய தேவையில்லை.

செயல் விளக்கம்:-

உபுண்டுவில் Application -->internet ---> ktorrent னை தெரிவு செய்க பின்னர் இவ்வாறு ஒரு திரை ஓபன் ஆகும்.




அதில் file --> open என்பதை தெரிவு செய்து தங்களுடைய torrent file இன் location னை சரியாக கொடுக்கவும் பின்னர் அவ்வளவு தான் தங்களுடைய file download ஆக ஆரம்பித்து விடும்.



torrent file னை download செய்யும் வழிமுறை:-

முதலில் mininova மற்றும் torrentz போன்ற torrent site களில் சென்று தங்களுடைய file க்கான torrent file னை download செய்ய வேண்டும்.




தங்களுக்கு எந்த file தேவையோ அதை search box ல் type செய்யவும் பின்னர் page open ஆகும் அதில் தங்களுடைய file இருந்தால் file மேலே வைத்து ஒரு கிளிக் செய்யவும் பின்னர் ஒரு page open ஆகும் அதில் download torrent என்ற link இருக்கும் அதை கிளிக் செய்யும் அவ்வளவு தான் தங்களுடைய torrent file download ஆகும்.

லினக்ஸ் kernel என்றால் என்ன?



மனிதனுக்கு மிகவும் தேவையானது இதயம் இவை இல்லாத ஒரு உடல் இல்லவே இல்லை. இதயம் மனிதனின் மிக முக்கிய உறுப்பு அது போல தான் kernel லும், லினக்ஸ் ஆக இருந்தாலும் சரி விண்டோஸ் ஆக இருந்தாலும் சரி அனைத்து வேலைகளை ஒழுங்கு படுத்துவது இதுவே அதனால் தான் இதனை operating system களின் இதயம் என்று கூறபடுக்கின்றது. சரி ஏன் லினக்ஸ் kernel ளை இந்த இடுகையில் சொல்ல வேண்டும் என்று சிலர் நினைக்கலாம் kernel ளை பற்றி பலபேருக்கு தெரியாமல் இருக்கும் அதை கருத்தில் கொண்டே இதை ஒரு இடுகையாக எழுத வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பே இருந்தே ஒரு எண்ணம்.
ஒரு நாள் எனது நண்பன் ஒருவரிடம் kernel என்றால் என்ன என்று ஒரு கேள்வியை கேட்டேன் அதற்கு அவர் கூறிய பதில் தெரியவில்லை என்பதே? கடைசிக்கு அவர் முதுகலை பட்டம் பெற்றவர் இவ்வாறு kernel பாற்றிய ஒரு செய்தியும் தெரியாமல் இருக்க நாம் linux kernel என்று ஆயிரம் முறை கூறினாலும் எவருக்கும் தெரியாது அதை கருத்தில் கொண்டே இந்த kernel பற்றியும் அதன் நன்மையையும் எழுதுகின்றேன் .

kernel -ன் பயன்:-

முதலில் தங்களுடைய கணினியை on செய்தவுடன் RAM ல் load ஆவது kernel தான் இதன் வேலை என்னவென்றால் தங்களுடைய கணினியில் உள்ள அனைத்து harware driver களை load செய்வது,power management ,process management ,network management இன்னும் பல வேலைகளை இந்த kernel தான் செய்கின்றது.
mobile ஆக இருக்கட்டும் கணினியாக இருக்கட்டும் இந்த kernel லே main core ஆக உள்ளது kernel இல்லாது எந்த ஒரு இயங்குதளமும் இது வரை இல்லை. mac இயங்குதளம் மற்றும் open சொலாரிஸ் இவை இரண்டும் லினக்ஸ் kernel இல் இயங்குகின்றது. லினக்ஸ் கேர்நெல் இல் என்ன அப்படி இருக்கு என்று நம்மில் சிலருக்கு வினா எழும் லினக்ஸ் kernel மிகவும் compress செய்யப்பட்டு இருக்கும், அதனால் எந்த ஒரு வைரஸ் program கள் இந்த kernel னை access செய்ய முடியாது ஆவே லினக்ஸ் இல் வைரஸ் தொல்லை இல்லை இதில் security மிகவும் அதிகம்.
kernel developer கள் kernel க்கு ஒன்றுக்கு அதிகமான algorithm பயன்ப்படுத்துவார்கள் இதனால் kernel னை பிரிப்பது கடினம்.

kernel version :-

ஒவ்வொரு
kernel புதிய பதிப்புகள் வெளிவர ஆறு மதங்கள் ஆகும். ஆகவே தான் புதிய லினக்ஸ் kernel ல் புதிய harware device கள் செயல்படும் ஆறு மாதங்களில் வெளியான harware device களின் driver கள் புதிய kernel ல் சேர்க்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு புதிய லினக்ஸ் kernel பதிப்பில் பழைய பதிப்பில் உள்ள தீமைகளை நீக்கப்பட்டு இருக்கும்.

Monday, July 26, 2010

லினக்சில் எவ்வாறு mp3 பாடலை வெட்டுவது?


புதிய புதிய திரைப்படங்கள் மாதம் ஒன்று வெளிவந்த வண்ணம் உள்ளது படத்தின் பாடல் நமக்கு பிடித்திருந்தால் அந்த பாடலை நம்முடைய mobile ringtone ஆக வைக்க விரும்புவோம் இந்த ringtone னை பெற நாம் மொபைல் downloading cafe னை நாடுவோம் அவர்கள் இது தான் ஒரு வாய்ப்பு என்று தங்கள் மனதில் எவ்வளவு விலை தோன்றுகின்றதோ அதை நம்மிடம் வாங்கிவிடுவார்கள்.
நமக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அதை ஏன் மற்றவர்களிடம் பணம் செலுத்தி பெறவேண்டும். இந்த இடுகையில் எப்படி பாடல்களை வெட்டுவது என்பதை பாப்போம். பாடல்களை மிகவும் எளிதாக வெட்டமுடியும் இந்த mp3split tool னை கொண்டு. இது ஒரு ஓபன் source tool இவை இரண்டு பதிப்புகளிலும் லினக்ஸ் மற்றும் விண்டோஸ் கிடைக்கின்றது இதை பயன்படுத்துவதும் செயல்படுத்துவதும் மிகவும் எளிது.

இதில் எவ்வளவு பெரிய file ஆக இருந்தாலும் வெட்ட முடியும் வார்த்தைகள் மற்றும் வரிகள் போன்ற வற்றை தங்களின் ரசனைக்கு ஏற்ப வெட்ட முடியும் மிக சிறந்த உதாரணம் வடிவேல் மற்றும் விவேக் காமெடி வார்த்தைகள் இவ்வாறே ringtone ஆக உருவாக்க படுகின்றது .

இந்த mp3splt னை இந்த http://mp3splt.sourceforge.net/ சென்று தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் இன்ஸ்டால் செய்த பின்னர் உபுண்டு வில் sound and video வில் தெரிந்தெடுக்க பின்னர் இவ்வாறு ஒரு திரை தோன்றும்.


தங்களுடைய விருப்பமான பாடலின் file location ல் தெரிந்தெடுக்க வேண்டும் பிறகு எந்த வரியை வெட்ட வேண்டுமோ அதை play செய்து அதன் duration னை குறிக்க வேண்டும்.


தங்களுடைய பாடல் வெட்டிய பிறகு தாங்கள் தரும் location இல் வெட்டிய file save ஆகும்.

Saturday, July 24, 2010

லினக்சில் பாடலை ஒரு format இல் இருந்து மற்றொரு format மாற்றுவது எப்படி...


இன்று பாடல்கள் கேட்பவர்கள் இல்லாத இடமே இல்லை பாடல் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு பங்காக உள்ளது,பாடல் பலவித format இல் உள்ளது பாடல்களின் format களுக்கு தகுந்தவாறு அதன் தரம் இருக்கும் பாடல்களின் மிக உயர்ந்த format எதுவென்றால் wav format தான் இதன் தரத்தினை பொறுத்து இதன் size ம் அதிகரிக்கும்.

mp3 இந்த format அதிக noice மற்றும் அளவுக்கு அதிகமான frequency னை இது தவிர்கின்றது இதனால் பாடல் களின் தரம் குறைவாக இருக்கும், இந்த mp3 format அதிகமாக பயன்படுத்த காரணம் இந்த file இன் size எந்த அளவுக்கு வேண்டும்மானாலும் மாற்றிக்கொள்ளலாம் wav format இல் அப்படி அல்ல குறைந்த அளவே 40 Mb இதனால் அதிக பாடல்களை cd மற்றும் dvd களில் சேமிக்க முடியாது,

ஒரு wav file format இல் உள்ள தெளிவு mp3 இல் இருக்காது. இந்த wav file format கல் அனைத்து லினக்ஸ் பதிப்புகளிலும் default ஆக play ஆகும் , ஆனால் mp3 file கள் அப்படி play ஆகாது தனி gstream package கள் இன்ஸ்டால் செய்யவேண்டும். நன்மிடம் mp3 பாடல்கள் தான் உள்ளது இதை எப்படி wav மற்றும் நமக்கு பிடித்த format க்கு மாற்றுவது? இதை மாற்றுவது மிகவும் எளிது விண்டோஸ் சார்ந்த பதிப்பில் மிகவும் எளிதாக இதை செய்யலாம் ஆனால் அதற்க்கான செலவு அதிகம், இதை எளிதாக மாற்ற மற்றும் இலவசமாக பெற நிறைய opensoruce application உள்ளது.

அதில் sound converter இன் பங்கு மிகவும் போற்றத்தக்கது இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இன்ஸ்டால் செய்த பின்னர் பின்வரும் செயல் முறையை செய்யவும்.

Application -->sound and video --->sound converter


பின்னர் ஒரு திரை ஓபன் ஆகும் அதில் எந்த file னை convert செய்ய வேண்டுமோ அதன் file path னை கொடுக்க வேண்டும். குறிப்பு:-
தங்களின் file format களை தெரிவு செய்ய Edit -->preference னை தெரிவு செய்க



குறிப்பு:-
தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறுமொழியில் தெரிவிக்கவும் நன்றி!!!!













Tuesday, July 20, 2010

Android ஒரு பார்வை..



android என்றவுடன் புதுமை என்று நினைக்க வேண்டாம் இது ஒரு லினக்ஸ் சார்ந்த ஒரு mobile operationg சிஸ்டம் இது நோக்கியா மற்றும் அனைத்து மொபைல் product களில் இது தற்பொழுது இயங்குகின்றது இது google நிறுவனத்தின் ஒரு project ஆகும்.


இது எதிர்கால mobile operating system இதுவே. இது அற்புதம் அருமை நிறைய libaries மற்றும் software development kit களை support செய்யும் இதனை apache licence இன் கீழ் இது வழங்க படுகின்றது.வீடியோ வை record செய்ய மற்றும் வீடியோ வை அணைத்து mode களிலும் பார்க்க முடியும் ப்ளுடூத் device களை குறிப்பிட்ட தூரத்தில் இணைக்க முடியும் google சார்ந்த அனைத்து product களை support செய்யும் மேலும் animated transition களை support செய்யும். இது kernel 2 .6 .29 இல் இயங்குகின்றது integrated camera மற்றும் CDMA technology யும் support செய்யும்.

விரைவான hardware access பல வகையான screen resolution மற்றும் wvga திரையை சப்போர்ட் செய்கின்றது. இது பிளாஷ் லைட் camera நை support செய்கின்றது மற்றும் ஜாவா வை support செய்கின்றது புதிய technology யும் புதிய புதிய மீடியா format file களை இது play செய்யும்.
குறிப்பு:-

எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அதிகமாக எழுத முடிய வில்லை மனிக்கவும்!!!!!!!!!!

Sunday, July 18, 2010

இது நம்ம open office ஆ... இது

இன்றைக்கு அனைவரும் ஓய்வு எடுக்கும் தினம் இந்த தினத்தில் பொழுது போக்க திரைப்படங்களை பார்போம் அதை நம்முடைய open office இல் பார்போமே. இது எப்படி பார்க்க முடியம் என்று சிலருக்கு ஒரு கேள்விகள் எழலாம் இதை எளிதாக செய்ய முடியும் ஒரு சில presentation பள்ளி மற்றும் கல்லூரியில் செய்யும் பொழுது ஒரு சில இடங்களில் வீடியோ மற்றும் ஆடியோ வை பயன்படுத்த நேரிடும் அந்த சமயத்தில் வேறு application களை நாடவேண்டும். open ஆபீஸ் இல் இந்த option னை default டாக தந்துள்ளனர் இதை செய்வதும் மிகவும் எளிது ஒவ்வொரு slide களில் ஒரு பாடல் ,ஒரு திரைப்படம் போற்றவற்றை சேர்த்து presentation னை செய்து பார்க்கலாம். இந்த option ms -office லும் உள்ளது ஆனால் முந்தைய பதிப்பில் இல்லை சரி இதை எப்படி செய்வது என்பதை பார்போம். முதலில் தங்களுக்கு தேவையான Design னை ஓபன் ஆபீஸ் இல் தேர்ந்தெடுக்க வேண்டும் ஒரு திரை ஓபன் ஆகும். பின்னர் மெனு பாரில் சென்று insert னை தெரிந்தெடுக்க வேண்டும் அதில் movie மற்றும் ஆடியோ என்ற option இருக்கும் அதை தெரிவு செய்க. பின்னர் தங்களுடைய movie மற்றும் audio insert செய்ய வேண்டும் பிறகு இவ்வாறு தெரியும் ஒரு திரை தெரியும் . பின்னர் F5 key னை press செய்து slide னை play செய்க அவ்வளவு தான் அற்புதமாக தங்களுடைய movie மற்றும் ஆடியோ play ஆகும்.

Friday, July 16, 2010

லினக்ஸ் கணினியில் உள்ள hardware களை பற்றி தெரிந்துகொள்ள.

மறுமொழி:-

இன்றைய காலத்தில் புதிய புதிய harware device கள் சந்தையில் வந்தவண்ணம் உள்ளது நாம் புதிய கணினி வாங்கினால் அதில் எந்த கம்பெனி hardware device கள் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள நமக்கு ஆர்வமாக இருக்கும் இந்த ஆர்வம் எனக்கு மட்டும் இல்லை கணினி வைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இருக்கும்.விண்டோஸ் இயங்குதளத்தில் இதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும் என்று சிலர் நினைக்கலாம் லினக்ஸ் இல் command னை கொண்டு தான் பார்க்க முடியம் என்று நினைக்கலாம் அது முற்றிலும் தவறான எண்ணம் .command னை கொண்டு harware device களை பார்ப்பது என்பது அந்த காலம் தற்பொழுது அனைத்தும் GUI interface மூலம் பார்க்கும் விதமாக நிறைய tools கள் opensource developer கள் தந்துள்ளனர்.

பயன்:-

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய மான விஷயம் என்ன வென்றால் motherboard இது நல்ல தரமான கம்பெனி இல் தயாரிக்க பட்டதா என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும்,இதை நாம் தெரிந்து கொள்ளும் வரை நமக்கு ஒரு நிம்மதி கிடைக்காது.நான் புதிய கணினி வாங்கிவிட்டேன் என்று நண்பர்களிடம் கூறினால் போதும் motherboard எந்த கம்பெனி என்று கேட்பார்கள் அடுத்து RAM size எவ்வளவு என்று கேட்பார்கள் இது போன்ற அடிப்படை hardware device களின் தகவலை நான் தெரிந்து கொள்வது அவசியம்,இதை நாம் எப்படி தெரிந்து கொள்ளவது?இதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும் sysinfo tool னை கொண்டு, இது மிகவும் அதி அற்புதமான tool இது கணினியில் உள்ள அனைத்து hardware device களை நமக்கு தெரிவிக்கும்.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய மற்றும் இதனை பற்றி தெரிந்துகொள்ள இங்கு click செய்யவும்
இதனை அந்த அந்த லினக்ஸ் பதிப்புக்கு தகுந்த மாதிரி package னை download செய்யவும்.

செயல் விளக்கம்:-

இது உபுண்டு கணினியில், டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர்

Application --->system tools

பின்னர் sysinfo னை தெரிவுசெய்யவும் இதை போல ஒரு திரை ஓபன் ஆகும் .


  • இந்த திரை எந்த லினக்ஸ் இயங்குதளம் இன்ஸ்டால் செய்துள்ளோம் என்ற செய்தியை திரையில் காண்பிக்கும்.

  • இந்த திரை process இன் speed மற்றும் அதன் மாடல் போன்றவற்றை திரையில் காண்பிக்கும்.



  • இந்த திரை மொத்த memory மற்றும் அதன் கொள்ளவு போன்றவற்றை திரையில் காண்பிக்கும்.


  • இந்த திரை motherboard இல் உள்ள அனைத்து bus மற்றும் இதர தகவலை திரையில் காண்பிக்கும்.



குறிப்பு:-
இந்த தகவல் தங்களுக்கு போதுமானதாக இருகின்றதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை

Thursday, July 15, 2010

பாடம் 4 : லினக்ஸ் system information command

இந்த பாடத்தில் லினக்ஸ் system information களை பார்க்க உதவும் command .

uname

இந்த command kernel version னை தெரிந்துகொள்ள உதவும்

உதாரணம்:-

chandru@chandru-laptop:~$ uname -a
Linux chandru-laptop 2.6.32-21-generic #32-Ubuntu SMP Fri Apr 16 08:10:02 UTC 2010 i686 GNU/Linux

head -n1 /etc/issue

இந்த command version னை தெரிந்துகொள்ள உதவும்

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ head -n1 /etc/issue
Ubuntu 10.04 LTS \n \l

cat /proc/partitions

இந்த command system இன் partition பற்றிய தகவலை தெரிவிக்கும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ cat /proc/partitions
major minor #blocks name

251 0 892416 ramzswap0
8 0 312571224 sda
8 1 14718976 sda1
8 2 102400 sda2
8 3 149450072 sda3
8 4 1 sda4
8 5 61869056 sda5
8 6 74137600 sda6
8 7 12283904 sda7

grep MemTotal /proc/meminfo

இந்த command total memory space னை தெரிந்துகொள்ள உதவும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ grep MemTotal /proc/meminfo
MemTotal: 1784836 kB

lspci

இந்த command இது அணைத்து pci inforamtion களை திரையில் காண்பிக்கும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ lspci -tv
-+-[0000:3f]-+-00.0 Intel Corporation Core Processor QuickPath Architecture Generic Non-core Registers
| +-00.1 Intel Corporation Core Processor QuickPath Architecture System Address Decoder
| +-02.0 Intel Corporation Core Processor QPI Link 0
| +-02.1 Intel Corporation Core Processor QPI Physical 0
| +-02.2 Intel Corporation Core Processor Reserved
| \-02.3 Intel Corporation Core Processor Reserved
\-[0000:00]-+-00.0 Intel Corporation Core Processor DRAM Controller
+-02.0 Intel Corporation Core Processor Integrated Graphics Controller
+-16.0 Intel Corporation 5 Series/3400 Series Chipset HECI Controller
+-1a.0 Intel Corporation 5 Series/3400 Series Chipset USB2 Enhanced Host Controller
+-1b.0 Intel Corporation 5 Series/3400 Series Chipset High Definition Audio
+-1c.0-[0000:02]----00.0 Atheros Communications Inc. AR9285 Wireless Network Adapter (PCI-Express)
+-1c.1-[0000:03]--+-00.0 Ricoh Co Ltd Device e822
| +-00.1 Ricoh Co Ltd Device e230
| \-00.4 Ricoh Co Ltd Device e822
+-1c.2-[0000:04]----00.0 Marvell Technology Group Ltd. Device 4381
+-1c.5-[0000:05-0c]--
+-1d.0 Intel Corporation 5 Series/3400 Series Chipset USB2 Enhanced Host Controller
+-1e.0-[0000:0d]--
+-1f.0 Intel Corporation Mobile 5 Series Chipset LPC Interface Controller
+-1f.2 Intel Corporation 5 Series/3400 Series Chipset 4 port SATA AHCI Controller
+-1f.3 Intel Corporation 5 Series/3400 Series Chipset SMBus Controller
\-1f.6 Intel Corporation 5 Series/3400 Series Chipset Thermal Subsystem

lsusb

இந்த command system இல் உள்ள அனைத்து usb port களையும் திரையில் காண்பிக்கும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ lsusb
Bus 002 Device 005: ID 15d9:0a4c Dexon
Bus 002 Device 004: ID 0fce:d039 Sony Ericsson Mobile Communications AB
Bus 002 Device 002: ID 8087:0020
Bus 002 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 001 Device 003: ID 064e:a213 Suyin Corp.
Bus 001 Device 002: ID 8087:0020
Bus 001 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub

grep -F capacity: /proc/acpi/battery/BAT0/info

இந்த command லேப்டாப் battery இன் நிலையை காண உதவும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ grep -F capacity: /proc/acpi/battery/BAT0/info
design capacity: 42180 mWh
last full capacity: 40620 mWh
குறிப்பு:-
இந்த பதிப்பில் உள்ள command தங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என நம்புகின்றேன்.

பாடம் 3 : லினக்ஸ் networking command

இந்த பாடத்தில் சில networking command னை பற்றி பார்க்க போறோம்.

ethtool etho


இந்த command eithernet interface இன் status நை தெரிந்துகொள்ள உதவுகின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ ethtool

iwconfig eth1


இந்த command wireless status னை தெரிந்துகொள்ள உதவும்

உதாரணம்:-

chandru@chandru-laptop:~$ iwconfig eth1

iwlist scan

இந்த command wireless range னை தெரிந்து கொள்ள உதவும்

உதாரணம்:-

chandru@chandru-laptop:~$ iwconfig eth1
eth1 No such device

iwlist scan

இந்த command network interface னை list out பண்ணி காட்டும்

உதாரணம்:-

chandru@chandru-laptop:~$ iwlist scan
lo Interface doesn't support scanning.

eth0 Interface doesn't support scanning.

wlan0 Failed to read scan data : Network is down

usb0 Interface doesn't support scanning.

ip link show

இந்த command network interface னை தெரிந்துக்கொள்ள உதவும்.

உதாரணம் : -

chandru@chandru-laptop:~$ ip link show
1: lo: mtu 16436 qdisc noqueue state UNKNOWN
link/loopback 00:00:00:00:00:00 brd 00:00:00:00:00:00
2: eth0: mtu 1500 qdisc pfifo_fast state DOWN qlen 1000
link/ether 54:42:49:0d:76:7a brd ff:ff:ff:ff:ff:ff
3: wlan0: mtu 1500 qdisc noop state DOWN qlen 1000
link/ether 78:dd:08:c6:96:a9 brd ff:ff:ff:ff:ff:ff
5: usb0: mtu 1500 qdisc pfifo_fast state UP qlen 1000
link/ether 02:80:37:0a:03:00 brd ff:ff:ff:ff:ff:ff

ip addr show

இந்த command ip address interface னை தெரிந்துக்கொள்ள உதவும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ ip addr show
1: lo: mtu 16436 qdisc noqueue state UNKNOWN
link/loopback 00:00:00:00:00:00 brd 00:00:00:00:00:00
inet 127.0.0.1/8 scope host lo
inet6 ::1/128 scope host
valid_lft forever preferred_lft forever
2: eth0: mtu 1500 qdisc pfifo_fast state DOWN qlen 1000
link/ether 54:42:49:0d:76:7a brd ff:ff:ff:ff:ff:ff
3: wlan0: mtu 1500 qdisc noop state DOWN qlen 1000
link/ether 78:dd:08:c6:96:a9 brd ff:ff:ff:ff:ff:ff
5: usb0: mtu 1500 qdisc pfifo_fast state UP qlen 1000
link/ether 02:80:37:0a:03:00 brd ff:ff:ff:ff:ff:ff
inet 175.40.19.190/30 brd 175.40.19.191 scope global usb0
inet6 fe80::80:37ff:fe0a:300/64 scope link
valid_lft forever preferred_lft forever

ip route show

இந்த command routing table னை திரையில் காண்பிக்கும்.

உதாரணம் :-
chandru@chandru-laptop:~$ ip route show
175.40.19.188/30 dev usb0 proto kernel scope link src 175.40.19.190 metric 1
169.254.0.0/16 dev usb0 scope link metric 1000
default via 175.40.19.189 dev usb0 proto static

hostname -i

இந்த command hostname இன் local ip adddress னை திரையில் காண்பிக்கும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ hostname -i
127.0.1.1

netstat -tupl

இந்த command கணினியில் உள்ள அணைத்து இன்டர்நெட் service னை தெரிவிக்கும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ netstat -tupl
(Not all processes could be identified, non-owned process info
will not be shown, you would have to be root to see it all.)
Active Internet connections (only servers)
Proto Recv-Q Send-Q Local Address Foreign Address State PID/Program name
tcp 0 0 localhost:ipp *:* LISTEN -
tcp6 0 0 localhost:ipp [::]:* LISTEN -
udp 0 0 *:bootpc *:* -
udp 0 0 *:mdns *:* -
udp 0 0 *:49055 *:*

netstat -tup

இந்த command நிலுவையில் உள்ள connection திரையில் காண்பிக்கும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ netstat -tup
(Not all processes could be identified, non-owned process info
will not be shown, you would have to be root to see it all.)
Active Internet connections (w/o servers)
Proto Recv-Q Send-Q Local Address Foreign Address State PID/Program name
tcp 1 0 chandru-laptop.lo:42410 WHOIS.ANYCAST-FO.:whois CLOSE_WAIT 25263/whois
tcp 0 0 chandru-laptop.lo:43453 lxer.com:www TIME_WAIT -
tcp 0 0 chandru-laptop.lo:33483 209.85.132.104:www ESTABLISHED 24703/firefox-bin
tcp 0 0 chandru-laptop.lo:43976 209.85.132.118:www ESTABLISHED 3826/yarssr
tcp 0 0 chandru-laptop.lo:33377 tx-in-f121.1e100.ne:www ESTABLISHED 3826/yarssr
tcp 0 0 chandru-laptop.lo:43975 209.85.132.118:www ESTABLISHED 3826/yarssr
tcp 4036 0 chandru-laptop.lo:53241 WHOIS.ANYCAST-FO.:whois CLOSE_WAIT 25268/whois

10 ஒபன் source போடோஷப் Application




1. GIMP
2. Krita
3. Paint.NET
4. ChocoFlop
5. Cinepaint
6. Pixia
7. Pixen
8. Picnik
9. Splashup
10. Adobe Photoshop Express

photoshop எனறவுடன் நமக்கு நினைவில் வருவது adobe நிறுவனம் தான்,open source photoshop க்கும் adobe photoshop க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது,நம்முடைய gimp இது adobe photoshop னை விட நிறைய option களை கொண்டுள்ளது,அதாவது adobe photoshop படங்களை மட்டுமே மற்றங்கள் செய்யமுடியும் gimp இல் animation களையும் செய்ய முடியும்.adobe photoshop இல் உள்ள அனைத்து Tool கலும் இதில் உள்ளது ஒவ்வொரு லினக்ஸ் பதிப்பில் வரும் wallpaper அனைத்தும் இந்த gimp னை கொண்டு உருவாக்கப்பட்டது மேலும் இது இலவசமாக தரபடுக்கின்றது.இந்த gimp ன் மகிமை அனிமேஷன் designer க்கு மட்டுமே தெரியும் மேலும் தெரிந்துக்கொள்ள
இங்கே click செய்யவும்.
adobe photoshop நன்கு அறிந்தவர்கள் இதனை எழிதில் பயன்படுத்தலாம் ,இந்த gimp அனைத்து லினக்ஸ் பதிப்பிலும் default ஆக இல்லை என்றால் நீங்களாகவே தரவிரக்கம் செய்து install செய்ய வேண்டும்இதனை download செய்ய இங்கே click செய்யவும்.
gimp இன் படம் பின்வருமாறு.இந்த gimp ன் tutorial களை செய்து பார்க்க இங்கே click செய்யவும்.

Nokia மொபைல் இப்ப meego லினக்ஸ்க்கு அடிமை


Nokia மற்றும் Intell இரு நிறுவனம் தங்களின் மொபையில் product ல் meego லினக்ஸினை இயங்குதளமாக தந்துள்ளனர் இதனால் ஜவா mobile developer காளுக்கு பெரும் பாதிப்பை எற்படுத்தியுள்ளது.இந்த meego வின் வருகை லினக்ஸ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தலும் ஜவா வினை நம்பி இருந்த developer களுக்கு மிகவும் துக்கத்தினை எற்படுத்தியுள்ளது.

Nokia நிறுவனம் மற்றொரு லினக்ஸ் சார்ந்த இயங்குதளமான android க்கு மாறுக்கின்றது open source மென்பொருளை பயன்படுத்துவதால் இணையம் மற்றும் Multimedia பயன்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுக்கின்றது.இதனால் virus மற்றும் trojan developer களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

open source வளர்ச்சியை கண்டு microsoft நிறுவனம் தங்களின் வேலையாட்கலை குறைக்க திட்டமிட்டுள்ளது.இந்த meego லினக்ஸ் ஆரம்ப கால லினக்ஸ் பதிப்புகளில் ஒன்று,meego nokia 7 series அனைத்துலும் இயங்கி அசத்தியுள்ளது இந்த meego linux இயங்குதளத்தினை கொண்ட மொபைல் இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. இது wifi,4G போன்ற தொழிற்நுட்பத்தை அற்புதமாக பயன்படுத இது support செய்கின்றது.இந்த meego mobile பதிப்பு hardware கலுக்கு தகுந்தவாறு வேறுபடுக்கின்றது.
இதை மேலும் தெரிந்துக்கொள்ள இந்த இணைய தளத்தினை நாடவும்..நன்றி!!!!!!

லினக்ஸில் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது?


மறுமொழிகள்:-

தமிழில்
தட்டச்சு செய்ய நிறைய Application கள் windows சார்ந்த பதிப்பில் உள்ளது ஆனால் லினக்ஸில் உள்ளதா? என்ற கேள்வி புதிய லினக்ஸ் பயன்னாளாருக்கு ஒரு எண்ணம் மனதில் துளியளவுக் கூட ஏற்படக்கூடாது.

வருத்தம்
:-

windows னை விட லினக்ஸில் மிகவும் சிறந்த மென்பொருள்கள் உள்ளது அதை பற்றி எடுத்துக்ககூற ஒரு தமிழ் இணையம் ஒன்று கூட இல்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமளிக்கின்றது.தமிழ்லை வளர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் மட்டுமே போதாது அதற்க்கான நடவடிக்கையை நாம் தான் எடுக்கவேண்டும் அது எப்படிபட்ட நடவடிக்கை என்றால் நாம் அன்றாட வழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள் தமிழ் சொற்களாக இருக்க வேண்டும் ஆங்கில சொற்கள் முழுமையாக தவிற்க முடியாது தான். ""நாம் ரசத்துடன் பொரியல் சேர்பது போல ஆங்கில சொற்களை பயன்ப்படுதினால் போதும் பின்னர் பாருங்கள் தமிழின் வளர்ச்சியை"".

உலகிள்
மிகப்பெரிய நாடான சீனா தங்கள் நாட்டு மொழியை பயன்படுத்தி நிறைய துறையில் சாதனைகளை புரிந்துள்ளது நாம் எல்லோரும் அறிந்த ஒரு தகவல்! அதை போல நாமும் தமிழில் கணினியை பயின்று சதனைகளை பூரிவோம்.

செயல்முறை:-

சரி இன்றைய செய்தியை சொல்லிவிடுக்கின்றேன் இந்த தகவல் வலைப்பூவை தமிழில் எழுதும் என்னுடைய நண்பர்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும்.Linux பதிப்பில் தமிழில் தட்டச்சு செய்ய ibus என்ற tool உதவுக்கின்றது இது இந்திய மொழிகள் அனைதையும் தட்டச்சு செய்யும் வித மாக unicode வடிவம் தரப்பட்டுள்ளது இதை எளிதாக பயன்படுத்தலாம் .இதை install செய்யும் வழிமுறையையும் மற்றும் செய்முறையையும் பார்போம்.

முதலில்
http://code.google.com/p/ibus/downloads/list இந்த தளத்தில் சென்று மொன்பொருளை தரவிரக்கம் செய்ய வேண்டும்.install செய்த பின்னர்
( விளக்கம் ubuntu linux க்கு)

Goto-->System-->preferences-->IBus preferencesதேர்ந்தெடுக்கவும்
பின்னர்
இதை போல ஒரு திரை open ஆகும்இதில் தமிழ் தட்டச்சுவை Enable மற்றும் Disable செய்ய Default Key களை தேர்ந்தெடுக்க உதவும்,மற்றும் Font size,Font style போன்றவைகளை தெரிவு செய்யலாம்.

பின்னர் இந்த திரை input method னை தெரிவு செய்ய உதவும்,இதில் நூற்றுக்கும் மேலான input method கள் உள்ளது.இந்த திரை தங்களின் keyboard னை தெரிவு செய்ய உதவும்.பின்னர் தங்களின் திரையின் இடது ஒரதில் ஒரு BUTTON மறைந்த நிலையில் இருக்கும்,நீங்கள் editor னை ஒபென் செய்த பின்னர் இந்த button னை Left click செய்து தங்களின் input method னை தெரிவு செய்ய வேண்டும். input method 7 வகைகள் உள்ளது,அதில் phonetic னை தெரிவு செய்க ஏன்னென்றால் இது நமது பேச்சு வழக்கினை எழுதினால் போதும் இதன் செயல் மிகவும் அற்புதம் நீங்கள் பயன்படுத்தி பாரூங்கள்.....

குறிப்பு:-
இதைப் பற்றிய கருத்துகள் கண்டிப்பாக எழுத வேண்டும் நன்றி!!!!!

Friday, July 9, 2010

open office இல் எவ்வாறு pdf கோப்புகளை உருவாக்குவது...

ஓபன் ஆபீஸ் மிக சிறந்த ஒரு Application லினக்ஸ் மற்றும் விண்டோஸ் பயனாளர்களுக்கு, இதில் பல வசதிகள் உள்ளது அதில் ஒன்று pdf கோப்பு னை உருவாக்குவது, pdf file என்பது படம் மற்றும் எழுத்துகள் அடங்கிய ஒரு document file ஆகும்.இந்த document file களை தங்களின் பயன்பாட்டுக்கு தகுந்த மாதிரி உருவாக்கிக்கொள்ளலாம் இந்த pdf கோப்பு களை உருவாக்க சந்தையில் நிறைய tool கள் உள்ளது, open source application களை தவிர மற்றவைகளுக்கு கொஞ்சம் பணம் செலுத்த வேண்டும்.

செயல் முறை:-

தாங்கள் லினக்ஸ் பயனாளர் என்றால் இந்த ஓபன் ஆபீஸ் னை இன்ஸ்டால் செய்ய தேவை இருக்காது ஏன் என்றால் இது ஏற்கனவே தங்கள் லினக்ஸ் இயங்குதளத்தில் default ஆக இருக்கும்,விண்டோஸ் பயன்னாளர்கள் டவுன்லோட் செய்ய வேண்டும்.

இந்த விளக்கம் உபுண்டு இயங்குதளத்தில்.

Application --->office ---->word processor

இதனை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு window open ஆகும் .
அதில் தாங்கள் எதை டாகுமென்ட் பிளே ஆக உருவாக வேண்டுமோ அதனை எழுத வேண்டும்,எழுதி முடித்த பின்னர் பின்வரும் வழிமுறை பின்பற்றுக.

goto menu -----> File ------>தேர்ந்தெடுக்க----->export as pdf

மற்றொரு வழி மெனு பார் இல் உள்ள pdf என்ற பட்டன் னை அழுத்தினால் போதும்

படம்

பின்னர் தங்களின் document பெயரினையும்,எந்த இடத்தில் save செய்ய வேண்டும் என்ற இடத்தினை தரவேண்டும்.பின்னர் தங்களுடைய document களை pdf ஆக மாற்றி மகிழுங்கள்.
படம்

குறிப்பு:-

இந்த pdf file னை உருவாக்கும் முறை office -spread sheet மற்றும் office -presentation போன்றவைகளுக்கும் பொருந்தும் நன்றி!!!!!

Thursday, July 8, 2010

பாடம் 2 : அடிப்படை கட்டளைகள்....

இந்த பாடத்தில் லினக்சில் பயன்படுத்தும் கட்டளைகளை பார்க்க போகின்றோம்

mkdir -இந்த கட்டளை புதிய directory னை உருவாக்க உதவுகின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~mkdir <புதிய directory ன் பெயர் >
chandru@chandru-laptop:~$ mkdir tamillinux
chandru@chandru-laptop:~$

cd -இந்த கட்டளை ஒரு directory இல் இருந்து புதிய directory க்கு மாற உதவுகின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~ cd <நீங்கள் மாற போகும் directory ன் பெயர் >
chandru@chandru-laptop:~cd ~
இந்த கட்டளை home directory க்கு தங்களை மாற்றும்

vim -இந்த கட்டளை புதிய file னை உருவாக்க உதவும்

உதாரணம் :-
chandru@chandru-laptop:~vim <நீங்கள் உருவாக்கபோகும் file ன் பெயர் >

குறிப்பு :-

நீங்கள் இந்த command னை தட்டச்சு செய்த பின்னர் ஒரு editor ஓபன் ஆகும் அதில் நீங்கள் உருவாக்கும் file னை எழுதிய பின்னர் (ESc +: +wq )என்ற key களை அழுத்த வேண்டும் அப்பொழுதான் தங்களின் file save ஆகும்.

ls -இந்த command தங்களின் லினக்ஸ் கணினில் உள்ள அணைத்து பிளே மட்ட்ரும்டிறேக்டோரி களை திரையில் காண்பிக்கும்

உதாரணம்:-
chandru@chandru-laptop:~ls -A
.AbiSuite
.aptoncd
.bash_history
.bash_logout
.bashrc
.cache
.clamtk
.config
.conkyrc

இது எனது கணினியில் மறைந்துள்ள file மற்றும் directory களை திரையில் காண்பிக்கின்றது,இது போல நிறைய option கல் உள்ளது இந்த command னை தெளிவாக தெரிந்து கொள்ள man ls எனத் டெர்மினல் இல் தட்டச்சு செய்க

touch -இது பல empty file களை ஒரே நேரத்தில் உருவாக்க உதவுகின்றது.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ touch fosstamil1 fosstamil2 fosstamil3

cp -இந்த கட்டளை தங்களின் file களை வேறு file அல்லது directory க்கு copy செய்கின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ cp <எங்கிருந்து ><எதற்கு > தங்களின் file அல்லது directory இன் பெயரை குறிபிட வேண்டும்.
chandru@chandru-laptop:~$ touch file1 file2
chandru@chandru-laptop:~$ cp file2 file

mv -இந்த கட்டளை file மற்றும் directory னை move செய்கின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ mv <எங்கிருந்து ><எதற்கு >தங்களின் file அல்லது directory இன் பெயரை குறிபிட வேண்டும்.
chandru@chandru-laptop:~$ touch file1 file2
chandru@chandru-laptop:~$ mv file2 file

cat -இந்த command teriminal இல் ஒரு புதிய file னை உருவாக்க உதவுகின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ cat > <தங்களின் file ன் பெயர் >
chandru@chandru-laptop:~$ cat >fosstamil
wellcome back fosstamil

clear -இது தங்களின் terminal இல் உள்ள எழுத்துகளை clear செய்கின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ clear

date -இது கணினியின் தேதி மற்றும் நேரத்தை தெரிவிக்கிறது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ date
chandru@chandru-laptop:~$ date
Thu Jul 8 20:09:20 IST 2010

rm -இது file மற்றும் directory னை நீக்க உதவுகின்றது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ rm <நீக்க வேண்டியி file மற்றும் directory இன் பெயர் >
chandru@chandru-laptop:~$ rm tamillinux
chandru@chandru-laptop:~$

wc -இது file இல் உள்ள மொத்த எழுத்துகள் மற்றும் வரிகளை திரையில் காண்பிக்கும்

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ wc fosstamil1
1 4 27 fosstamil1
chandru@chandru-laptop:~$

gzip -இது file மற்றும் directory னை சுருக்க உதவுகிறது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ gzip -v file1
file1: 0.0% -- replaced with file1.gz

குறிப்பு :-
இதில் உள்ள -v என்ற option நாம் எந்த வேலையை செய்தோம் என்பதை திரையில் தெரிவிக்க உதவுகிறது

unzip -இது zip செய்த file மற்றும் driectory னை விரிக்க உதவுகிறது

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ unzip -v file1
file1: 0.0% -- replaced with file1

history -இது நாம் பயன்படுத்திய command களை திரையில் தோன்ற செய்ய உதவுகிறது.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ history
1 g++
2 javac
3 java
4 ffmpeg
5 apt-get install linux-backports-modules-alsa-2.6.31-20-generic
6 su
7 sudo login root
8 sudo passwd root
9 gedit /etc/apt/sources.list
10 apt-get update
11 sudo -i
12 apt-get update
13 sudo -i
14 cat /proc/asound/version
ஏறக்...,
இது நான் எனது கணினியில் பயன்படுத்திய கட்டளைகள்.......

whereis -இது file மற்றும் directory எங்குள்ளது என்பதை காண உதவுகிறது மேலும் கட்டளைகள் இருக்கும் directory னை தெரிந்து கொள்ளவும் உதவும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~/Desktop$ whereis fosstamil1
fosstamil1:
chandru@chandru-laptop:~/Desktop$ whereis ls
ls: /bin/ls /usr/share/man/man1/ls.1.gz
chandru@chandru-laptop:~/Desktop$

find -இது file மற்றும் directory இருக்கின்றதா என தெரிந்து கொள்ள உதவும்.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ find fosstamil
fosstamil

tree -இது file மாற்றும் directory இன் மரகிளை வடிவத்தினை ஏற்படுத்தும் மேலும் மொத்த directory மற்றும் file களின் அளவினை திரையிடும்

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ tree
`-- runtime.htm
|-- Documents
| |-- dd.odt
| |-- mysitelink.odt
| `-- oss i unit.odt
|-- Downloads
| |-- 10.1.1.14.4805.pdf
| |-- 1124597b.pdf
| |-- 1.1C.linux-Basiccommand.pdf
| |-- 8051_Micro_controller.pdf
| |-- 80C51_FAM_ARCH_1.pdf
| |-- arm_inst.pdf
| |-- ARM_Processors.pdf
| |-- Browse
| | |-- 20-Optimization.pdf
| | |-- 426-10.pdf
| | |-- cheatsheet.pdf
| | |-- favicon.ico
| | |-- ieee_linux.ppt
| | |-- install.pdf.en
| | |-- linuxCheatSheet0.3.pdf
| | |-- NHMWriter-User-Manual.pdf
| | |-- Smash Template (Blogger Versions)
| | | |-- Images
| | | | |-- avatar.png
| | | | |-- bulletoff.png
| | | | |-- cats-hover-left.png
| | | | |-- cats-hover-right.png
| | | | |-- comment_icn.png
| | | | |-- contentbg.png
| | | | |-- contentbot.png
| | | | |-- contenttop.png
| | | | |-- def-thumb.png
.
.
.
etc
| `-- showthread.php.html
`-- Videos
`-- Webcam

48 directories, 654 files
இது எனது கணினியில் உள்ள மொத்த file மற்றும் directory

man -இது நாமக்கு ஏதேனும் சந்தேங்கள் மற்றும் கட்டளைகள் பயன்படுத்தும் முறைகள் அதன் option களை தெரிந்துகொள்ள உதவுகின்றது.

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ man ls

இவ்வாறு திரையில் தோன்றும்
NAME
ls - list directory contents

SYNOPSIS
ls [OPTION]... [FILE]...

DESCRIPTION
List information about the FILEs (the current directory by
default). Sort entries alphabetically if none of -cftuvSUX nor
--sort.

Mandatory arguments to long options are mandatory for short
options too.

-a, --all
do not ignore entries starting with .

-A, --almost-all
do not list implied . and ..

பின்னர் வெளியே வர ctrl +z தட்டச்சு செய்ய வேண்டும்.

ps - இது லினக்ஸ் கணினியில் run ஆகும் அணைத்து Application tools களின் Id எண்ணை தெரிந்துகொள்ள உதவும்

உதாரணம்:-
chandru@chandru-laptop:~$ ps -A
PID TTY TIME CMD
1 ? 00:00:00 init
2 ? 00:00:00 kthreadd
3 ? 00:00:00 migration/0
4 ? 00:00:00 ksoftirqd/0
5 ? 00:00:00 watchdog/0
6 ? 00:00:00 migration/1
7 ? 00:00:00 ksoftirqd/1
8 ? 00:00:00 watchdog/1
9 ? 00:00:00 migration/2
10 ? 00:00:00 ksoftirqd/2
11 ? 00:00:00 watchdog/2
12 ? 00:00:00 migration/3
13 ? 00:00:00 ksoftirqd/3
14 ? 00:00:00 watchdog/3
15 ? 00:00:00 events/0
16 ? 00:00:00 events/1
17 ? 00:00:00 events/2

kill - application மற்றும் tools களின் வேலையை நிறுத்த உதவுகின்றது.

உதாரணம்:-

chandru@chandru-laptop:~$ kill
குறிப்பு:-
pid என்ற இடத்தில் எந்த application மற்றும் டூல்ஸ் களின் வேலையை நிறுத்த வேண்டுமோ அதன் பிட் னை தரவேண்டும் pid னை காண ps -A
என்ற கட்டளை உதவுகின்றது



குறிப்பு :-
படங்களுடன் விளக்கம் தர எனக்கு போதிய நேரம் இல்லை அதனால் வாசகர்கள் அதனை பொருபடுத்த வேண்டாம் நன்றி!!!!!



Tuesday, July 6, 2010

பாடம் 1 :அடிப்படை லினக்ஸ் கட்டளைகள்

இந்த இடுகையில் இருந்து லினக்ஸ் command களின் பாடம் துவங்கியுள்ளது இவ்வாறு துவங்க காரணம்? என்ன வென்றால் சில வாசர்கள் லினக்ஸ் command னை கற்றுகொள்வது மிகவும் கடினம் என்று மறுமொழியை தந்துள்ளனர் அதை கருத்தில் கொண்டே இந்த பாட பகுதி எழுத ஆரம்பித்துலேன்,windows லும் சரி linux லும் சரி அடிப்படை கட்டளைகள் உள்ளது விண்டோஸ் பயன்படுத்தும் கட்டளைகளை போல தான் லினக்ஸ் கட்டளைகளும் என்ன புதிதாக லினக்ஸ் உள்ளது என்றல் command களுடன் option கல் அதிகமாக பயன்படுத்தபடுகின்றது. லினக்ஸ் command களை டூல்கள் என்றுதான் கூறுவார்கள் லினக்ஸ் command கள் பயன்படுத்தபடும் இடத்தை பொருத்து பல பிரிவாக பிரித்துள்ளனர் அவை பின்வரும்மாறு.

* Basic Linux commands
* Moving, copying, deleting & viewing files
* Finding files and text within files
* Starting & Stopping
* Accessing & mounting file systems
* Installing software for Linux
* User Administration
* X Window System
* File permissions
* Printing
* Installing software for Linux

ஒவ்வொரு பாடத்தில் ஒரு command மற்றும் அதன் option களை எடுத்துகாட்டுடன் பார்போம் நன்றி!!!!

Monday, July 5, 2010

உங்கள் லினக்ஸ் கணினியின் வெப்ப நிலையை பற்றிய செய்தியை காண ஆவலா?


நோக்கம்:-

என்னுடைய கணினியின் வெப்ப நிலையை காண வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாலா ஒரு ஆசை மனிதனின் உடலில் உள்ள வெப்ப நிலையை காண நிறைய கருவிகள் இருக்கின்றது கணினியின் வெப்ப நிலையை காண ஏதேனும் tool கள் இருகின்றதா என்ற ஒரு ஆராச்சியில் நான் இறங்கினேன் நிறைய இணையதளங்களை தேடிபார்த்தேன்,ஒரு நல்ல தகவல் ஒன்று கிடைத்தது அது ஒன்றும் இல்லை acpi tool தான் இது ஒரு கணினிக்கு ஒரு மருத்துவர் என்றும் கூறலாம்.

பயன்கள் :-

இது மடிகணினி பயன்னாலாருக்கு மிகவும் உகந்த ஒரு tool . இதன் பயன்பாடு என்ன? இது கணினியின் வெப்ப நிலை மற்றும் மடிகனினியின் Battery இன் கொள்ளவு மற்றும் நிலைகளை தெரிவிக்கும்.இது எந்த ஒரு லினக்ஸ் பதிப்பிலும் தரப்படவில்லை நீங்கலாக தான் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.நீங்கள் உபுண்டு லினக்ஸ் பயன்னாலராக இருந்தால் டெர்மினல் இல் sudo apt -get install acpi என type செய்ய வேண்டும்.இந்த tool னை தவிர நிறைய tool கள் உள்ளது வெப்ப நிலையை காண

இன்ஸ்டால் செய்யும் வழிமுறை:-

இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்யும் வழிமுறை விளக்கமாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

செய்முறை விளக்கம்:-



இன்ஸ்டால் செய்த பின்னர் டெர்மினல் இல் acpi -V என type செய்க அது பின்வரும் தகவல் அடங்கிய செய்தியை டெர்மினல் இல் தெரிவிக்கும்

Battery 0: Full, 100%
Battery 0: design capacity 7800 mAh, last full capacity 4988 mAh = 63%
Adapter 0: on-line
Thermal 0: ok, 63.5 degrees C
Thermal 0: trip point 0 switches to mode critical at temperature 126.0 degrees C
Cooling 0: Processor 0 of 10
Cooling 1: Processor 0 of 10


என்னுடையது மடிகணினி என்பதால் Battery என்ற செய்தியை தெரிவிக்கின்றது,நீங்கள் Desktop கணினியை பயன்படுத்தினால் Battery என்ற செய்தியை தெரிவிக்காது.

குறிப்பு :-

தங்களுக்கு தெரிந்த டூல்களை தெரிவிக்கலாம் நன்றி!!!!

Sunday, July 4, 2010

Linux மற்றும் windows இல் எளிய முறையில் Typing கற்றுக்கொள்ள உதவும் Open source application

மறுமொழி :-

Typing என்பது மிக பெரிய கடினமான வேலை என்று நினைக்க வேண்டாம் மிகவும் எளிது நீங்கள் typing கற்றுகொடுக்கும் பயிலகங்களை நாடி செல்ல வேண்டாம் typing கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தாலே போதும் நீங்களும் திரையை பார்க்காமல் keyboard இல் type செய்யலாம்,சிலர் நினைக்கலாம் பயிலகங்களை நாடியே typing கற்றுக்கொள்ள முடியவில்லை இந்த Application உதவுமா என்று?என்னுடைய மறுமொழி என்னவென்றால் மிகவும் எளிது.

கதை :-

நான் புதிதாக polytechnic இல் சேரும்போது keyboard இல் ஒவ்வொரு எழுத்தாக தேடி தான் type செய்வேன் இது எனக்கும் வருத்தமாக இருந்தது என்னுடை ஆசிரியர் சதீஷ் என்பவர் keyboard னையும் திரையையும் பார்க்காமல் keyboard இல் type செய்வார் அப்பொழுது நான் நினைத்தேன் நாமும் இப்படி type செய்ய வேண்டும் என்று, நான் இதற்காக எந்தவொரு பயிலகங்களை நாடி செல்லவில்லை...""எதுவும் சில காலம் என்று நினைத்துகொண்டு நான் polytechnic படிப்பினை முடித்தேன் "அந்த சில காலம்" எனக்கு வந்தது, நான் புதிதாக ஒரு கணினியை வாங்கினேன் அதில் manderiva லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவி அதில் கல்வி சார்ந்த package கல் தேடி பார்த்தேன் அதில் நிறைய இருந்தது ktouch என்ற ஒரு பெயரில் ஒரு application என்னட இது புதிய பெயராக உள்ளதே என்று நினைத்துகொண்டு அதை ஓபன் செய்தேன் அப்பொழுதான் எனக்கு தெரிந்தது அது ஒரு Typing கற்றுக்கொள்ள உதவும் tool என்று. அதை நான் தினமும் ஒரு அரை மணி நேரம் பயன்படுதினேன் பிறகு என்ன ஆயிற்று எந்த ஒரு கணினியை பயன்படுத்தினாலும் சரி எனது விரல்கள் மிக வேகமாகவும் திரையை பார்க்காமலும் விரைவாக எந்த ஒரு வார்த்தைகளையும் type செய்துவிடும். தங்களின் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில் நான் கூறும் typing application னை பயன்படுத்தினால் போதும்.

Tool களின் பெயர்கள் :-
Application பயன்கள் :-

இந்த application கள் எப்படி keyboard இல் விரல்களை பயன்படுத்த வேண்டும்,எவ்வாறு Typing செய்ய வேண்டும் என்ற பல கருத்துகளை நமக்கு தெரிவிக்கும் முதலில் சிரமமாகத்தான் இருக்கும் பிறகு பாருங்கள் தங்களின் வேகத்தை.விண்டோஸ் லும் நிறைய Typing application இருக்கின்றது அது இப்படி இல்லை நிறைய நுணுக்கங்களை அதில் தரவில்லை,அவை அனைத்தும் பணம் செலுத்தி வாங்க வேண்டி உள்ளது இவை இலவசம் மிகவும் எளிதாக பயன்படுத்தலாம்.

இயங்குதள ஆதரவு :-

இந்த klavaro லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இல் இயங்கும் விதமாக உள்ளது ஆனால் KTouch அப்படி இல்லை லினக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே ஆதரிக்கும் .விண்டோஸ் பயன்னாளர்கள் klavaro னை download செய்ய இங்கே கிளிக் செய்யவும் .,இன்ஸ்டால் செய்யும் வழிமுறையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

செயல் விளக்கம் :-

இந்த விளக்க முறையை படமாக தந்துலேன் நான் klavaro னை பயன்படுத்தி உள்ளேன்,முதலில் klavaro டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் , அதனை ஓபன் செய்யவேண்டும் எல்லா லினக்ஸ் பதிப்பிலும் Education என்ற பகுதில் இது இன்ஸ்டால் ஆகி இருக்கும்.அதில் நிறைய நிலைகள் உள்ளது எப்படி விரல்களை பயன்படுத்தவேண்டும் மற்றும் எவ்வாறு இடைவெளி விட வேண்டும் என்ற பல நிலைகள் உள்ளது அதற்க்கான விளக்க படம் பின்வருமாறு

எப்படி தங்களின் விரல்களை பயன்படுத்த வேண்டும் என்ற விளக்க படம்


இது இரண்டாவது நிலை ஒவ்வரு வார்த்தைகளை எவ்வாறு இடைவெளி விட்டு தட்டச்சு செய்ய வேண்டும் என்ற விளக்க படம்

இது இறுதி நிலை தங்களின் தட்டச்சு வேகத்தை அறிந்து கொள்ள உதவும் அதன் விளக்க படம்


குறிப்பு :-

இந்த விளக்கம் போதவில்லை என்றால் டூல் களின் பெயரினை செடுக்கவும் நன்றி வணக்கம்!!!

Thursday, July 1, 2010

free open source வீடியோ editor கல்...


விண்டோஸ் சார்ந்து நிறைய வீடியோ editing application கல் நிறைய உள்ளது ஆனால் லினக்ஸ் இல் உள்ளதா? என்று யாரும் கேட்க வேண்டாம் லினக்ஸ் லும் நிறைய வீடியோ editing application உள்ளது இவை அனைத்தும் இலவசம் விண்டோஸ் சார்ந்து வெளியிடும் application கல் முதலில் free என்றுதான் கூறுவார்கள் பின்னர் அதை நாம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு தங்களின் creadit card no அல்லது தங்களின் email id போன்ற நிறைய தகவல்களை தந்தால்தான் முழுமையாக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் இல்லை என்றல் ஆறு மாதமோ அல்லது ஒரு மாத காலமோ பயன்படுத்துங்கள் என்று கூறிவிடுவார்கள் , free என்று சொல்லி விட்டு பணத்தை பறிப்பது இந்த பிரச்சனை free open soruce application இல் இல்லை.இவை அனைத்தையும் இலவசமாக தருகின்றனர் இதில் எந்த ஒரு பயன்னாலர்களின் தகவலையும் கேட்பதில்லை. பல வீடியோ editing application லினக்ஸ் இல் உள்ளது அதில் மிகவும் அதிகமாக பயன்படுத்தும் application கல் இந்த நாளும் தான்.
தங்களின் வீடியோ வை பொருத்து சவுண்ட் effect மற்றும் picture effect போன்றவற்றை விண்டோஸ் movie maker னை விட சிறப்பாக தருகின்றது. pal ,ntsc aspect radio னை support செய்கின்றது மற்றும் flash ,mpeg ,ogc ,avi ,wmv ,mp4 போன்ற பிரபல வீடியோ format கலை support செய்கின்றது.வீடியோ effect கல் bluescreen ,blurrning ,rotation ,colortools போன்றவைகளை இவைகள் கொண்டுள்ளது. ஆடியோ effect கல் அற்புதம் multi track னை support செய்கின்றது ,இதை தவிர நிறைய டூல்ஸ் மற்றும் effect கல் தரப்பட்டுள்ளது .இதை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும் நன்மை /தீமைகள்!
மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் பெயரினை கிளிக் செய்யவும்.....