live cd என்றால் என்ன?
live cd என்றவுடன் புதிய வகையான cd என்று நினைக்க வேண்டாம்? live cd என்று கடைகளில் விலைக்கு கேட்க வேண்டாம். live cd என்பது இயங்குதளத்தை cd ல் இருந்தவாறே பயன்படுத்தும் ஒரு முறை இயங்குதளம் நேரடியாக hard disk ல் நிறுவாமல் பயன்படுத்தமுடியும். சில லினக்ஸ் பதிப்புகள் இந்த live cd முறையை பயன்படுதுகின்றனர் அந்த வகையில் நம்முடைய உபுண்டு தலைசிறந்து நிற்கின்றது.இந்த live cd முறைய பயன்படுத்துவதால் விண்டோஸ் பயன்னாலருக்கு ஏற்படும் நன்மைகள் என்ன! என்ன!! யாருக்காவது தெரியுமா எனக்கு வெறும் நான்கு மட்டுமே தெரியும். உலகம் முழுவதும் விண்டோஸ் பயன்னாளர்கள் தங்கள் இயங்குதளத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்ய live உபுண்டு cd யை வைத்துள்ளனர்
என்ன அந்த நான்கு என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.
- விண்டோஸ் crash ஆகும் பொழுது data வை recover செய்ய
- memory னை test செய்ய
- hard disk னை தெரிந்துகொள்ள
- எளிதாக partition செய்ய
மேலே சொன்ன நான்கு பிரச்சனைக்காக live cd னை பயன்படுதுக்கின்றோம். விண்டோஸ் சிஸ்டம் எப்பொழுது கிராஷ் ஆகும் தெரியமா? எனக்கு தெரிந்த ஒரு உண்மை சரியாக விண்டோஸ் னை shoutdown செய்யாமல் இருந்தால் விண்டோஸ் crash ஆகிவிடும் இந்த பிரச்சனை நான் விண்டோஸ் பயன்படுத்தும் பொழுது ஏற்பட்டது.
அப்படி கிராஷ் ஆகும் பொழுது நாம் என்ன செய்வோம்?திரும்பவும் விண்டோஸ் னை install செய்வோம் ஆனால் நாம் வைத்திருந்தத my documents file களை பெறமுடியுமா? இந்த மாதிரி சமயத்தில் live cd உதவி செய்கின்றது மேலும் boot ஆகாமல் இருக்கும் system இல் உள்ள data வை recover செய்யவும் உதவும்.
அடுத்த பிரச்சனை என்ன memory (RAM ) ஒரு சில கணினி ram size குறைவாக இருந்தாலும் மற்றும் பளுடைந்தாலும் வேலை செய்யாது . அந்த சமயத்தில் நாம் எப்படி RAM னை check செய்வது? இந்த மாதிரி சமயத்தில் தான் live cd ல் memory test என்ற ஒரு option cd boot ஆனவுடன் தெரியும் அதை கொண்டு நாம் RAM னை test செய்துவிடலாம்.
அடுத்து நம் கணினியில் இருக்கும் hard disk இன் size மற்றும் எந்த வகையான type ide மற்றும் sata என்பது போன்ற செய்தியை தெரிந்துக்கொள்ள இந்த live cd உதவுகின்றது.
partition என்பது ஒரு அடிப்படையான விஷயம் partition type இயங்குதளத்திற்கு தகுந்த மாதிரி வேறுபடும் விண்டோஸ் ல் ntfs ,fat32 ,fat போன்ற filesystem னை பயன்படுத்த முடியும் அதற்கு தகுந்த மாதிரி நாம் partition செய்ய வேண்டும். partition செய்ய நாம் partition magic போன்ற tool களை நாட வேண்டாம்!! உபுண்டு வில் partition editor என்ற tool னை கொண்டு அந்த வேலையை செய்ய முடியும். இந்த partition editor னை live cd இல் இருந்தே பயன்படுத்த முடியும்.
good info. Keep the good work.
ReplyDeleteBest wishes
Navanithan
super
ReplyDeletesuthanthira.co.cc Says:@
ReplyDeleteThanking you very much sir...
மக்கள் தளபதி/Navanithan/ナパニ Says:@
ReplyDeletethanks friend for you comments