Pages

Monday, August 9, 2010

லினக்சின் ஆரம்பகாலமும்!நவீனகாலமும்!!


லினக்சின் ஆரம்பகாலமும் நவீனகாலமும் பாற்றி இந்த பதிவில் பார்ப்போம் லினக்ஸ் ஆரம்பகாலத்தில் டெர்மினல் மட்டுமே இருந்தது பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. டெர்மினல் லை பயன்படுத்த நமக்கு முழுமையாக லினக்ஸ் கட்டளை தெரிந்தால் மட்டுமே லினக்ஸ் நை பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை உருவாகியது இதனால் நிறைய கணினி பயன்னாளர்கள் விண்டோஸ் னை தங்கள் பயன்பாட்டுக்கு சரியானது என்று தீர்மானித்துக்கொண்டு தங்கள் சிந்தையை விண்டோஸ் பக்கம் திருப்பினர் இதனால் ஆரம்பகாலத்தில் லினக்சின் வளர்ச்சி மிகவும் எண்ண முடியாத அளவுக்கு குன்றியிருந்தது.

அந்த நிலை மற்றும் அச்சம் நம் கணினி பயன்னாளர்களிடம் உள்ளது இந்த அச்சம் பிறக்க காரணம் command தான் என்று எண்ணி லினக்ஸ் மற்றும் open source developer கள் ஒவ்வொரு command செய்யும் வேலையை tool மற்றும் application வடிவில் தந்தனர் இதனால் லினக்ஸ் பயன்னாலர்களின் எண்ணிக்கை உயர்ந்தது மேலும் விண்டோஸ் பதிப்புகளுக்கு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியது லினக்ஸ் வளர்ச்சி.

ஆரம்பகாலம் தொட்டு நம்முடைய லினக்ஸ் webserver களில் தலைச்சிறந்து விளங்குகின்றது அதனால் தான் லினக்ஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை தர நிறைய நிறுவனம் போட்டிபோட்டுக்கொண்டு ஆள்சேர்ப்பில் இறங்கியது இவை அனைத்தும் ஆரம்பகாலகட்டத்தில், நமக்கு தேவையான command tool னை இன்ஸ்டால் செய்வது என்பது ஆரம்பக்காலத்தில் மிகவும் எளிதல்ல முழுமையான command பற்றிய தெரிந்தால் மட்டுமே செய்ய முடியும்

சரி இப்படி இருக்க நாம் நவீன காலத்தில் உள்ள லினக்ஸ் பதிப்பை பாப்போம்.
நவீனம் என்றலே புதுமைக்கு பஞ்சம் இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும் நவீன காலத்தில் உள்ள லினக்ஸ் பதிப்பில் command தெரிந்தாலும்! சரி தெரியாவிட்டாலும்? சரி மிகவும் வேகமாவும் தெளிவாகவும் பயன்படுத்த முடியும் இது எல்லோருக்கும் புரிவதில்லை பழைய காலத்தில் உள்ள குறையை சொல்லிவிடுவார்கள் "கஷ்டம்" "கஷ்டம்"? என்று

நீங்கள் நவீன காலத்தில் உள்ள லினக்ஸ் பதிப்புகளில் எந்த ஒரு புதிய application மற்றும் tool களை இன்ஸ்டால் மிகவும் எளிதாக செய்துவிடலாம் விண்டோஸ்'ல் .exe file னை எவ்வாறு இன்ஸ்டால் செய்கின்றமோ அதைப்போல தான் இதிலும்,முதலில் பல லினக்ஸ் பதிப்புகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.லினக்சின் ஆரம்ப கால பதிப்பான redhat ,டெபியன்,opensuse இவை சார்ந்தே நிறைய நவீன லினக்ஸ் பதிப்புகள் வெளிவருகின்றது. redhat சார்ந்த linux பதிப்பில் .rpm என்ற file format ' ல் உள்ள application மற்றும் tool களை டவுன்லோட் செய்து file னை இன்ஸ்டால் செய்துவிடலாம் அதைப்போல தான் டெபியன் சார்ந்த லினக்ஸ் பதிப்புகளிலும் .deb format ல் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

சிறந்த உதாரணம் உபுண்டு லினக்ஸ் இது டெபியன் லினக்ஸ் சார்ந்த ஒரு லினக்ஸ் பதிப்பாகும், உபுண்டுவில் .deb file format ல் application னை டவுன்லோட் செய்து மிக எளிதாக இன்ஸ்டால் செய்துவிடலாம்.நவீன காலத்தில் ஒவ்வொரு process வேலைக்கும் ஒரு tool automatic ஆக ரன் ஆகும் இதற்கு சிறந்த உதாரணம் linux ல் pendrive னை mount செய்வது? ஆரம்ப லினக்ஸ் பதிப்புகளில் pendrive னை mount செய்வது மிகவும் கடினம் mount command தெரிந்தால் மட்டுமே pendrive னை mount செய்ய முடியும், தற்பொழுதுள்ள லினக்ஸ் பதிப்புகளில் auto mount ஆகிவிடும்,

என்ன காரணம் என்றால்? mount command ஆனது default ஆக ரன் ஆகிகொண்டிருக்கும் இதனால் pendrive னை insert செய்தவுடன் mount ஆகிவிடும்.இதை தவிர desktop envrionment நிறைய உள்ளது மிகவும் பிரபலமான டெஸ்க்டாப் Gnome மற்றும் kde இதை தவிர பல டெஸ்க்டாப் environment ல் உள்ளது இதை பற்றி ஒரு பதிவில் எழுதியுள்ளேன்.

நவீன கால பதிப்பில் 3d மற்றும் visual effect போற்றவைகளை ஒவ்வொரு லினக்ஸ் பதிப்புகளிலும் உள்நுழைத்து லினக்ஸ் பயன்னாலர்களை மகிழ்ச்சி படுத்துகின்றனர். கேம் மற்றும் கல்வி சார்ந்த மென்பொருளை இலவசமாக தருகின்றனர் இதனால் லினக்ஸ் னை தலைசிறந்த operating system என்று கூறும்விதமாக செயல் படுகின்றனர் லினக்ஸ் developer கள். இதை தவிர hardware பிரச்னை இதில் இல்லை எந்த ஒரு புதிய கணினி வாங்கினாலும் அதற்க்கான driver கள் default எடுத்துக்கொண்டு இயங்கும் இதுவே இதில் சிறப்பம்சம் harware driver இல்லை என்றால் kernel னை update செய்தால் போதும் பிரச்னை தீர்ந்துவிடும் .
நன்றி!!!

4 comments:

  1. தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் நன்றி!!!!!

    ReplyDelete
  2. where is indli.button. i want to vote

    ReplyDelete
  3. அருமையான பதிவு நன்றி தோழா!!!

    ReplyDelete